பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 வேடம் பூண்டு இங்கிலாந்திலிருந்து புதுச்சேரி வந்து சேர்ந்தாரே, வ. வே. சு என்கிற வரகனேரி சுப்ரமண்ய அய்யர்! அவரை மறக்க முடியுமா? மகாத்மா காந்தி ஒத்துழையாமைப் போர் தொடங்கிய போது தமது மகனுடன் சிறை சென்ற வழக்கறிஞர் தியாகி சாத்தூர் சுப்ரமணிய நாயனரை மறக்க முடியுமா. முடியாது; முடியாது. முடியவே முடியாது. விடுதலைப் போருக்கும் சுப்ரமண்யம் எனும் பெயருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழ் நாட்டில் ஏன், அகில இந்தியாவுக்குமே விடுதலைப் போரின் வீர தளபதியாகப் போர் முழக்கம் செய்துகொண்டு முன்னே சென்றவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். அவரது பாடல்கள் எழுச்சி மிக்கவை: உணர்ச்சி யூட்டுவன. போர் முரசு கொட்டி முன்செல்பவனின் குரல் அவை. இந் நாளிலே பலர் மனம்போனவாறு பாரதி பாடல்களைப் பாடுகிருர்கள். பாரதியோ உணர்ச்சிமிக்க கவி; எழுச்சி கொண்ட கவி. நாட்டு மக்களுக்கு எழுச்சியூட்டவே அவர் பாடினர். எனவே, பாரதி பாடல்களைப் பாடுவோர் எழுச்சி குன்ருமல் பாடவேண்டும். அப்படிப் பாடும்போது தான் அதிலே பாரதி என்ற மகாகவி உயிரோடு காட்சி தருவார். வேறு விதமாகப் பாடுதல் பாரதியைக் கொலே செய்வதற்கு ஒப்பாகும். ஆகவே, பாரதியைக் கொண்டாட விரும்புவோர் அவர்தம் பாடல்களை உணர்ச்சியோடு பாடவேண்டும். பாரதி எங்கே வாழ்கிருர் என்ருல், அவர்தம் பாடல் களிலே என்று சொல்வேன். அப்பாடல்களை அவர் பாடியது போலவே உணர்ச்சியுடன் பாடல் வேண்டும். வாழ்க பாரதி மகாகவி பாரதியின் புகழ் ஓங்குக! ஒங்குக! هppgpil)