பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டன. கிராமத் தொழில்கள், கைத்தறி நெசவுத் தொழில், கப்பல் படகு கட்டும் தொழில் முதலிய பல்வேறு தொழில்களிலே பணியாற்றும் தொழிலாளர்கள் ஆங்கிலேயர் அடங்குவர்.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி முதலிய ஐரோப்பிய நாடுகளிலே நவீன எந்திரத் தொழில்கள் தோன்றி வளர்ந்ததையொட்டி நவீன எந்திரத் தொழிலாளர்கள் கூட்டம் பெருகியது.

ஆரம்பத்தில் இந்த நவீன எந்திரத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை ஊதியம் மற்றும் வேலை நிலைமை மிகவும் மோசமாகவும் பரிதாபமாகவும் இருந்தது. எநந்திரத் தொழில் முதலாளிகளுக்கு சொந்தமான தொழிற்சாலைகளில் கிராமங்களிலிருந்து ஏராளமான ஏழை விவசாயிகளும் தொழிலாளர்களிலும் இந்தப் புதிய நவீனத் தொழில்களில் வேலைக்குச் சேர்ந்தார்கள். அவர்களுக்கு வேலை நிலைமை மிகவம் கடுமையாகவும் கொடுமையாகவும் இருந்தது. இரவும் பகலுமாக பல மணி நேரம் தினசரி வேலை வாங்கப்பட்டார்கள். அவர்களுடைய கூலி நிலைமையும் மோசமாக இருந்தது. அவர்களுடைய குடியிருப்புகள் படுமோசமாக எல்லா வகை சுகாதாரக் கேடுகளும் குவிந்திருந்தது. அந்த கூலிக்காரர்களின் குழந்தைகளின் நிலை இன்னும் மோசமாக இருந்தது.

மன்னராட்சி அரசாங்கமும் இது பற்றி அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. ஆவை முதலாளிகளும் இதுபற்றி கவலை கொள்ளவில்லை. ஆவை முதலாளிகளைப் பொருத்தவரை அவர்களுடைய தொழில் வசதிகள் லாபம், காலனி ஆதிக்கம் மார்க்கட் ஆதிக்கம், வியாபாரப் போக்குவரத்து வசதிகள் பற்றியல்லாமல் வேறு எதிலும் அக்கரை இல்லை. அவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, முழுமையான சுதந்திரம் ஆட்சி அதிகாரம் சாதகமான சட்ட திட்டங்கள், தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தி வேலை வாங்குவதற்கான அதிகாரம், அதற்கான அரசியல் சட்ட திட்டங்கள்

பற்றியே அதிகம் கவனம் செலுத்தின.

சாதாரண மக்கள், குறிப்பாக உழ்ைக்கும் மக்கள் ஒரு பக்கம் மன்னராட்சியின் கொடுமைகள், மத அமைப்புகள் மடங்களின் ஆதிக்கம் ஆகியவைகளிலிருந்து கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இந்த இருண்ட நிலைமைகளை எதிர்த்து மறுபக்கம் அறிவாளிகளின் மறுமலர்ச்சி இயக்கங்களும் தோன்றி வெடித்தன. அவைகள் தொழிலாளர்களின் விழிப்புணர்வுக்கும் எழுச்சிகளுக்கும் காரணமாக இருந்தன.

மன்னராட்சி, மதம், மடாலயம் ஆகிய முப்பெரும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் விடுதலை கோஷங்கள் மக்களிடம் எழுந்தன. அவை எழுச்சி பெற்றன.

மன்னராட்சி முறைகளுக்கு எதிராக, கத்தோலிக்க மதத்தின் மய்ய

158