பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணுவத்தலையீடுகளை எதிர்த்து பல ஆண்டுகள் கடுமையாகப் போராடி, அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை முறியடித்து முழு விடுதலை பெற்று, வியட்நாம் வடக்கு, தெற்கு ஆகிய இரு பகுதிகளும் ஒன்றிணைந்து வல்லமைமிக்க ஒரே நாடாக ஆசியாவில் வெளிப்பட்டிருப்பதாகும்.

இவ்வாறு உலகில் மூன்றில் ஒரு பாகம் தொழிலாளர் கட்சி ஆட்சி நடத்தும் பகுதிகளாக மாறியிருப்பதாகும்.

இவ்வாறு தொழிலாளர் கட்சிகளின் தலைமையில் உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வசிக்கும் நிலைப்பகுதிகளில் புதிய ஆட்சிகள் அமைந்தன. இந்த நாடுகள் எல்லாம் அடிக்கடி கூடியும், ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைப்புகளில் பணியாற்றியும் உலக அரங்கில் செயல்பட்டன.

இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் ஆரம்பத்தில் பின் தங்கிய நிலையிலேயே இருந்தன. ஆயினும் கூட்டு முயற்சியில். படிப்படியாக முன்னேறிக் கொண்டு வந்தன.

சீனா ஒரு பெரிய தேசம், மக்கள் தொகையில் உலகில் முதலாவது பெரிய நாடு. நீண்ட உள்நாட்டுப் போர் முடிந்து அந்த நாட்டில் 1949 ஆம் ஆண்டில் புதிய கம்யூனிஸ்ட்ஆட்சி ஏற்பட்டு அந்த நாட்டு அரசியல் உலகில் அசையத் தொடங்கியது.

இரண்டாவது உலகப் போர் 1945 ஆம் ஆண்டில் முடிந்த பின்னர் உலகில் பொதுவாக அமைதி ஏற்பட்டது. என்று கூறலாம். மூன்றில் ஒரு பங்கு உலகம் தொழிலாளர் கட்சிகளின் ஆட்சி ஏற்பட்டு அவைகள் நேரடியாகவும் ஐக்கிய நாட்டு சபைகள் மூலமாகவும் தங்கள் செல்வாக்கைச் செலுத்தி வந்தன.

உலக நாடுகளின் நிலைமையில் மற்றொரு முக்கியமான மாற்றம் இரண்டாவது உலகப் போர்1945ஆம் ஆண்டில் முடிந்த பின்னர் படிப்படியாக காலனி நாடுகள் ஒவ்வொன்றாக விடுதலை பெற்று சுதந்திர நாடுகள் ஆயின. ஆயினும் அந்நாடுகள் பொருளாதார வளர்ச்சியின் பின்தங்கிய நிலையிலேயே இருந்தன.

பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் தான் மக்களுடைய வாழ்வு வளம் பெறும். பொருளாதார வளர்ச்சிக்கு நான்கு முக்கிய தேவைகள் உள்ளன. 1. மூலதனம் (முதலீட்டு வசதி), 2. தொழில்நுட்பம், 3. சந்தை வசதி, 4. மக்கள் தொகை (மனித ஆற்றல்) ஆகியவை மிகவும் அவசியமானதாகும். இந்த நான்கு அம்சங்களிலும் வளர்முக நாடுகள் பின் தங்கியே இருந்தன. மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளைச் சார்ந்தே இருந்தன. அனைத்து நாடுகளும் அரசியல் துறையில் சுதந்திர நாடுகளாக இருந்த போதிலும் பொருளாதாரத் துறையில் பின் தங்கியும் வளர்ச்சியடைந்த நாடுகளைச் சார்ந்தே நிலையே நீடித்தது. இன்னும் நீடித்து வருகிறது. ஆயினும் உலக மயமாக்கலின் மையமாக உள்ள உலக வர்த்தக மையத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும்

176