பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலத்தின் சாரத்தைப் பாதுகாத்தல் அதை உயர்த்துதல், விவசாய உற்பத்திப் பொருள்களின் விலைவர்த்தகம், விவசாயப் பொருளாதாரத்தை சீரமைத்தல், உணவுப் பிரச்சினை, உலகமக்களின் பசியைப் பட்டினியைப் போக்குதல், அதை நிறைவேற்றும் வகையில் விவசாயக் கொள்கையை சீரமைத்தல் ஆகியவை முக்கிய இடம் பெறுகின்றன.

‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும்

இங்குவாழும் மனிதருக்கெல்லா

தனியொருவனுக்கு உணவில்லை

யெனில் ஜகத்தினை அழித்திடுவோம். ‘

என்னும் மகாகவிபாரதியின் வாக்குகள் நிறைவேற்றப்பட வேண்டும்

தொழிலாளர்:

தொழிலாளர் என்னும் தலைப்பில் மகாகவிபாரதியார் கூறும் சொற்களைக்

காண்போம். அவர் தனது காலத்தில் இருந்த கருத்துக்களை கவனத்திலும் கொண்டு அவர் சிறப்பான பல கருத்துக்களையும் எடுத்துக் கூறியுள்ளார்.

தொழிலுக்கும் செல்வத்துக்கு முள்ள சம்பந்தம்.

கைத்தொழிலாலே செல்வம் விளைகிறது. அறிவுத் தொழிலால் அது சேகரிக்கப்படுகிறது. கைத்தொழில் செல்வத்தை ஏற்படுத்துகிறது. அறிவுத்தொழில் கைத்தொழிலை நடத்துகிறது’ என்று மகாகவிபாரதியார் குறிப்பிடுகிறார். ‘புத்தியில்லாத மூடர்கள் சக்கரவர்த்திகளாகவும் ராஜாக்களாகவும் பெரிய நிலஸ்வான்களாகவும் முதலாளிகளாகவும் இருந்து பெருஞ்செல் வங்களைக் கையாளுதல் காண்கிறோம். எனவே, அறிவுத் திறமையாலும் அறிவு முயற்சியாலும் பெருஞ்செல்வம் திரட்டப்படுகிற தென்று சொல்லுதல் எங்ஙனம் பொருந்தும்? என்று கேட்டீர்களாயின் அதற்கு உத்தரம் சொல்லுகிறேன். என்று மகாகவி குறிப்பிடுகிறார்.

‘பல இடங்களில் இப்போது மூடர்களிடம் செல்வமிருப்பது காண்கிறோமாயினும் இவர்களுக்கு இந்தச் செல்வம் ஏற்படுத்திக் கொடுக்க இவர்களுடைய முன்னோர்களில் அநேகர் அல்லது ஒரு வராயினும் மிகுந்த புக்திசாலியும் அந்தப் புத்தியைக் கொண்டு சோம்பலின்றி விடாமுயற்சியுடன் உழைப்பவனாகவும் இருந்திருக்க வேண்டும். புத்தி மாத்திரம் இருந்தால் போதாது அதைக் கொண்டு சோம்பல் இல்லாமல் விடாமுயற்சியுடன் உழைக்கவும் வேண்டும். அப்போது தான் செல்வம் சேர இடமுண்டாகும். ‘வெறுமேயிருக பலத்தால் ராஜாக்கள் லைந்யங்களின் மிகுதி காரணமாகப் பிறநாடுகளைக் கொள்ளையிட்டு அளவிறந்த பூமியும் செல்வங்களும் சேர்த்ததாகச் சரித்திரங்களில் படித்திருக்கிறோமே, அப்படியிருக்கையில்

185