பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மொழியில் விஞ்ஞானப்படிப்பு

தகூரினத்துபானஷகளிலே - அதாவது தமிழிலும், தெலுங்கிலும் கன்னடத்திலும் மலையாளத்திலும் - சாஸ்திர (சயின்ஸ்) பாடம் கற்றுக் கொடுப்பதற்கு மேற்படி பாஷைகள் தகுதியில்லை என்று பச்சையப்பன் கால்ேஜ் தலைமை வாக்கியார் மிஸ்டர் ரோலோ என்பவர் சொல்லுகிறார். அவருக்கு இவ்விடத்து பர்ஷைகள் தெரியாது. எபங்கதி தெரியாமல் விரிக்கிறார். சாஸ்திரபாஷை நமது பாஷைகளில் மிகவும் எளிதாகச் சேர்த்துவிடலாம். மேலும் இயற்கை நடையிலே இங்கிலிவுைக் காட்டிலும் தமிழ் அதிக நேர்மையுடையது. ஆதலால் சாஸ்திரபிரவசனத்திற்கு மிகுந்த சீருடையது. இந்த ஸங்கதி நம்மவர்களிலே கூடச் சில இங்கிலிஷ் பண்டிதருக்குத் தெரியாது. ஆதலால் மிஸ்டர் ரோலோவை நாம் குற்றம் சொல்வதில் பயனில்லை.

சுதேசி சிற்பங்களில் சர்வகாலசாலைக் கட்டிடங்கள்:

காசியிலே ஹிந்து ஸர்வகலா சங்கம் கட்டும்போது பல மாளிகைகள் ஹிந்து சிற்பத்தைத்த முலியிருக்க வேண்டும். நவீனபாடசாலைகளுக்குரிய லக்ஷனங்கள் குறையக்கூடாது. ஆனால், சிற்பத்தின் மேனி சுதேசி விஷயமாக இருக்க வேண்டும். பாரத தேசத்து சிற்பிகளிலே தமிழ்நாட்டு ஸ்தபதிகள் ஒருமுக்கியமான அங்கமாவர். வங்காளத்திலே மகாகீர்த்தியுடன் சோபிக்கும் நவீன சாஸ்திரிகளில் நாயகராகிய அவனிந்திர தாகூர் கூட இக்காலத்திலும் தமிழ்நாட்டில் வாழும் ஸ்தபதிகளிடம் உயர்ந்த தொழில் இருப்பதாக மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். ஆதலால் மேற்படி ஸ்ர்வ கலாசங்கத்தின் கூட்டங்களிலே கூடியவரை நமது தமிழ் ஸ்தபதிகளின் உதவியை நாடிக் கொள்ளும்படி தமிழ்நாட்டிலுள்ள பண்டிதர்களும் ஜனத்தலைவர்களும் மேற்படி சங்கத்திற்குப் பொருள் கொடுத்து உதவுந்தோறு முயற்சி செய்ய வேண்டும்’ என்று மகாகவி பாரதி கூறுகிறார்.

மகாகவிபாரதியார்: ஹிந்து மதம் உண்மை, எல்லாமதமும் உண்மைதான ஹிந்து மதம் ஆழ்ந்த உண்மை. உண்மையாலே தான் எல்லா நன்மையும் உண்டாகும் என்று கூறுகிறார். ஹிந்து மதத்தின் பொருமைகளை, அதன் உண்மைப்பொருளை ஆழ்ந்து படிக்க வேண்டும் என்பதை மகாகவி அடிக்கடி நைனவூட்டி வருகிறார்

“தாய் மொழியிலேதான் கல்விப் பயிற்சி அமையவேண்டும் என்பதை மகாகவி வலியுறுத்திவந்துள்ளார். பொதுக்கல்விமட்டுமல்ல, அனைத்துக்கல்வியும் விஞ்ஞானப்படிப்பும் அனைத்துப்பயிற்சியும் தாய்மொழியிலேயே அமைய வேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் மொழியே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதும் நமது மொழி சாஸ்திரப்பயிற்சிக்கு ஏற்ற மொழி என்பதையும் மகாகவிபாரதி கூறுகிறார்.

195