பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய தேசத்தார் அழிவுறுவது போல் மற்றபடி பூமண்டலமுழுவதிலும் எந்நாட்டிலும், மனிதர் இவ்வாறு வருஷந்தவறாமல் வேறு காரணம் யாதொன்றுமில்லாமல் சுத்தமான பஞ்சம் காரணமாக பதினாயிரம் லட்சக்கணக்கில் மடிந்து போகும் ஆச்சர்யத்தைக் காண முடியாது மனித ஜதியார்களுக்குள்ளேயே இப்படியென்றால் மற்ற மிருகங்கள், பட்சிகள், பூச்சிகள், வருஷ்ந்தவறாமல் கூட்டங் கூட்டமாக வெறுமே சுத்தமான பட்டினியால் மடியும் அநியாயம் கிடையாதென் து சொல்லாமலே விளங்கும்.

இங்ஙனம் மனித ஜாதிக்கே பொது இகழ்ச்சியாகவும், பொதுக்கஷ்டமாகவும், ஹிந்துக்களுக்கு விசேஷ அவமானமாகவும், விசேஷ கஷ்டமாகவும் மூண்டிருக்கும் இந்தவறுமையாகிய நோய்க்கு ஒரு மருந்து கண்டுபிடித்து அந்த நோயை நீக்கி இந்இதயாவிலும் பூமண்டலத்திலும் சகல ஜனங்களுக்கும் ஆஹார சம்பந்தமாகப் பயமில்லாதபடி அரை வயிற்றுக் கஞ்சயேனும் நிச்சயமாகக் கைடிப்பதற்கு வழிகள் எவை என்பதைப்பற்றி ஒவ்வொரு புத்திமானும் ஆராய்ச்சி செய்தல் இவ்வுலகத்திலுள்ள எல்லா அவசரங்களைக் காட்டிலும் பெரிய அவசரமென்று நான் கருதுகின்றேன். இந்தக் காரியத்தை நிறைவேற்றுவதற்குரிய ஸாதனங்களாக எனக்குத் தோன்றும் உபாயங்களைன்.ழுதுகின்றேன். இவ்விஷயத்தைக் குறித்துத் தமிழ் நாட்டு மக்களில் வேறுபல தத்தமக்குப் புலப்படும் உபாயங்களை நமது மித்திரனுக்கு (அப்போது மகாகவிபாரதியார் ஆசிரியராகப் பணியாற்றி வெளிவந்து கொண்டிருந்த தினசரிப் பத்திரிகை நாளிதழ் சுதேசமித்திரன்.

பூமண்டலத்தில் அபார நலத்தை ஏற்ப டுத்துவதற்கு வாய்ந்த முக்கியமான கருவிகளில் ஒன்றாக நிற்கும் பெருமையும் புகழும் ‘சுதேச மித்திரனுக்கு ஏய்துக மனித ஜாதி முழுமைக்கும் பேரவசியமான இந்த மஹா மஹோம காரத்தை நடத்துவதற்கு உறுதியான தந்திரங்களைக் காட்டி கொடுப்பதாகிய நிகரற்ற மறிமை தமிழ்நாட்டு மேதாவிகளுக்கு கொய்துக. உலகத்தில் செல்வத்தின் சம்பந்தமான ஏற்றதாழ்வுகளை மாற்ற எல்லாக்காரணங்களில் ஏற்படும் ஏற்றதாழ்வுகளைக் காட்டிலும் மிகக் கொடியனவாக மூண்டிருக்கின்றன.

மனுஷ்ய நாகரிகம் தோன்றிய காலமுதலாக எல்லா ஜனங்களும் ஸ்மானமாக வாழவேண்டும் என்ற கருத்து ஞானிகளாலும் பண்டிதர்களாலும் வற்புறுத்தப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால், ஒருவன் மிகவும் பல சாலியாக இருக்கிறான். அவனை பல மில்லாதவர்கள் மேன்மை உடையோனாகக் கருதுகிறார்கள். அவனும் அதில் மகிழ்ச்சி கொண்டவனாய் பலமில்லாதவர்களை வேறு சிருஷ்டியாக நினைத்து மிக இழிவாக நடத்தத் தொடங்குகிறான்.

இங்ஙனமே அழகுடையவன் அழகில்லாதவர்களைத் தாழ்வாக

201