பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவை ஆணி கொண்டடித்ததுபோலப் பற்றுறச் செய்து கொள்ளுதல் லாப நஷ்டங்களிலே சிந்தனையில்லாமமை. இவைதான் யோகத்தின் ரசகிசயம்’ என்று மகாகவி பாரதியார் தமிழ் மக்களுக்கு விடுக்கும் செய்தியாகும். இதில் மகாகவியின் உறுதிப்பாட்டையும் தீட்சண்யத்தையும் காண முடிகிறது. *

‘வீரத்தாய் மார்கள் என்னும் தலைப்பில் மகாகவி பாரதியார் எழுதுகிறார்:

தாயைப் போல பிள்ளை ஒர் தேசத்தார் ஞானமும் செல்வமும் வீரமும் புகழும் கொண்டு உன்னத நிலையிலே இருக்கும் போது, அவர்களுக்குளு’ ஆண் மக்களிடம் மட்டுமே யல்லாது பெண் பாலரிடத்திலும் கூடத்தர்மாபிமானமும் வீரத்தன்மையும் சிறந்து விளங்கும். ராஜபுத்திரர்கள் உன்னித நிலையிலே இருந்த காலத்தில், ராஜபுத்திர ஸ்திரிகள் காட்டிய வீர குணங்கள் இன்று கூட உலகத் தாரெல்லம் கேட்டு மெய் சிலிர்க்கும்படியாக இருக்கின்றன. யுத்த காலங்களில் ராஜபுத்திரி ஸ்திரிகள் தமது உயிரைப் புல்லினும் சிறியதாக மதித்து மானத்திற்காகவும் செய்திருக்கும் வீரச் செயல்கள் எண்ணி முடியாதன. ‘டாட்’ என்ற ஆசிரியர் எழுதியிருக்கும் ராஜஸ்தான் சரித்திரத்தை வாசித்தவர்களுக்கு நமது பாரத நாட்டு கூடித்திரிய மாதர்களுக்கு நிகரான வீரத்தாய்மார் உலகத்தில் வேறெங்கு மிகுந்ததில்லை என்பது நன்கு விளங்கும். நிற்க.

நமது தமிழ்நாட்டிலேயும் அத்தகைய பெருங்குடி (மூதில்) மாதர்கள் இருந்திருக்கிறாகள் என்பதைச் செந்தமிழ் பத்திரிகையாசிரியர் இம்மாதம் எழுதியிருக்கும் ஒர்திவ்யமான் உபந்நியாசத்திலே பல அரிய திருஷ்டாந்தங்களால் விளக்கியிருக்கிறார். அவரது உபந்நியாசத்தை சென்ற வாரத்தில் ஒரு பகுதியும் இவ்வாரத்தில் ஒரு பகுதியுமாக நமது பத்திரிகையிலே பிரசுரம் செய்திருக்கிறோம். இன்னும் சிறிது மிஞ்சியிருக்கிறது. அதனை அடுத்த வாரத்தில் பிரசுரம் செய்வோம்.

தமிழ்நாட்டுத் தாய்மாரைப் பற்றி செந்தமிழ் ஆசிரியர் எழுதியிருக்கும் உபந்தியாசத்தைப் படித்த போது எமக்கு உண்டான பெருமகிழ்ச்சிக்கும் பெருந்துயரத்திற்கும் அளவு இல்லை. 1800 வருஷங்களுக்கு முன்பாகவே இத்தனை பெருங்குணங்கள் வாய்க்கப் பெற்றிருந்த நாகரிக நாட்டிலே இவ்வளவு உயர்வு கொண்டிருந்த பெரியோரின் சந்ததியிலே இவர்கள் நடையிலும் செய்கைகளிலும் நிகரில்லாது கையாண்டு வந்த தமிழ்ப்பாஷையைம் பேசும் பெருங்குடியில் நாம் பிறந்திருக்கிறோம் என்பது அரிய மகிழ்ச்சியுண்டாகிறது.

ஆனால் பிரம்ம சந்ததியிலே இராவணன் பிறந்தது போல இத்தனை பெரிய நாகரிகமும் சிறப்பும் அறவலிமையும் பொருந்திய மேலோரின் சந்ததியிலே குலத்தைக் கொடுக்க வந்த கோடார்காம்பாகத் தோன்றி நாம் இக்காலத்திலே இருக்கும் நிலைமையயெல்லாம் பார்க்கும் போது மனம் புண்ணால்

247 .