பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் மகாகவி பாரதியார் எழுதுகிறார். “ப்பால் நான் என் முஸ்லிம் நண்பரை நோக்கி ‘தென் ஜில்லாக்களிலே தமிழ் பேசும் முஸ்லிம் (ராவுத்தர்)களுக்குள்ளே கோஷா வழக்கம் காணப்படவில்லையே அதன் காரணம் யாது. என்று கேட்டன். இங்கும் சிலர் அந்த வழக்கத்தைப் பரிபாலிக்கத்தான் செய்கிறார்கள் என்று என் முஸ்லிம் நண்பர் சொன்னார்.

‘எனினும், பலர் அதைப் பரிபாலிக்க வில்லையே, அதன் முகாந்திரம் யாது?’ என்று கேட்டேன்.

வேத சாஸ்திரவிதிகளில் அவர் செலுத்தக்கடமைப்பட்ட அளவு பயபக்தி செலுத்தாமலிருப்பதே அதற்கு முகாந்திரம் என்று என் முஸ்லிம் நண்பர் தெரிவித்தார்.

“அப்படியிருந்தும் தென் ஜில்லாக்களிலுள்ள இந்த முஸ்லிம்கள் மற்றப் பக்கத்து முஸ்லிம்களைக் காட்டிலும் அல்லாவின் பக்தியிலும் மதப்பற்றுதலிலும் சிறதேனும் குறைந்தவர்களில்லை என்பது பிரத்யகூடி மன்றோ அங்ஙனமாக இவர்கள் கொரான் விதிகளில் போதிய அளவு பயபக்தி செலுத்தாமல் இருக்கிறார்கள் என்று சொல்லுதல் நியாயமன்று இந்த கோஷா விஷயத்தில் பாத்திரம் இந்தத் தேச சம்பிரதாயங்களைத் தழுவி நடகிகறார்கள். இவர்களுடைய கூட்டத்தில் எத்தனை ஞானிகளும் பக்தி மான்களும் அவதாரம் செய்திருக்கிறாரகள். அவர்கள் இந்த கோஷா விஷயத்தை இக்கூட்டத்தின் மீது வற்புறுத்தாமல் தான் இருந்திருக்கிறார். ஆதலால் மத பக்தி முதலிய விஷயங்கள் மாறுதல் கூட ாதே யொழிய ஆசாரங்களில் காலத்துக்குத் தகுந்த இடத்துக்குத் தகுந்தமாறுதல்கள் செய்து கொள்ள இஸ்லாம் சாஸ்திரங்களே அனுமதி தரக்கூடுமென்று நினைக்கிறேன்” என்ற நான் சொன்னேன்.

இது கேட்டு அதை முஸ்லிம் நண்பர் மீளவும் ‘நான் நன்றாகக் குரான் ஒதியவர்களை விசாரித்து இந்த விஷயத்தில் முடிவு சொய்கிறேன்’ என்றார். இடைகாலத்து சாஸ்திரங்கள் இந்த விஷயத்தில் அதிக முரண் செலுத்தக் கூடும். ஆதலால் சாட்சாதி குரான் வேதத்தையே நன்றாகப் படித்து உணர்ந்தவர்களிடம் விசாரணை செய்யுங்கள் என்றேன்.

‘சரி அங்ஙனமே செய்கிறேன் என்று என் முஸ்லிம் நண்பர் சொன்னார்.

பிறகு துருக்கி தேசத்தில் ஸ்திரிகளுக்குள்ளே பிரமாண்டமான விடுதலை கிளர்ச்சி நடந்து வருவதைப் பற்றியும் அங்குப் பல மாதர்கள் கோஷா வழக்கத்தை முற்றிலும் ஒழித்து விட்டு கல்வி கேள்விகளில் உயர்ந்த தேர்ச்சியுடையோராய் தங்களுக்குள்ளே சபைகள் சேர்த்தும் தாங்களே உபந்நியாசங்கள் முதலியன நடத்தியும் உலகத்து மற்ற மாதங்களைப் போல் துருக்கியுள்ள மாதரும் கல்வி, விடுதலை, ஆண்களுடன் சமத்தும் இவற்றை எய்தி மேன்படுமாறு அதி தீவிரமான முயற்சிகள் செய்து வருவதைப்

79