பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 105 ஜெர்மனியிலிருந்து கமலா மீண்டும் சுவிட்சர் லாந்து மருத்துவமனைக்கே மாற்றப்பட்டார் ஆனால் அங்கு மருத்துவர்களால், கமலாவின் வியாதியைக் குணப்படுத்த இயலவில்லை. இறுதியில் 28 2. 1936-ல் கமலா நேருவின் ஆவி பிரிந்தது. இந்திராவின் கண்கள் அழுது சிவந்தன. தாங்க முடியாத துயரத்தில் ஆழ்ந்தார். இனி அவருக்கு ஒரே துணை தந்தை தான். நேரு தமது மகளைத் தொடர்ந்து படிக்க லண்டனில் ஒரு பள்ளியில் சேர்ந்தார். இந்திரா வும், குஜராத்தைச் சேர்ந்த சாந்தாகாந்தி என்னும் மாணவரும் அப்போது லண்டனில் ஒரே அறையில் தங்கிப் படித்தனர். கமலாவின் மரணத்துடன் நேருவுக்கு சொந்த வாழ்க்கை என்பதே இல்லாமல் போய் விட்டது. அவர் நாட்டுக்கு உடமையாகி விட்டார். நாட்டின் லட்சியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். திருமணம் இந்திராவும், பெரோஸ் காந்தியும் ஒருவரை ஒருவர் விரும்புவதை அறிந்த நேரு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினார். ஆனால் குடும்பத்தில் சிலர் இதற்கு சம்மதிக்கவில்லை மகா-7