பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 மகாத்மா காந்தி முதல் நேருவின் கடைசி நாட்கள் 1964-ம் ஆண்டு புவனேஸ்வர் காங்கிரஸ் மகாநாட்டில் நேரு திடீரென்று மயக்க முற்று விழுந்தார். பாரிச வாயுவினால் பாதிக்கப்பட்ட நேரு நான்கு மாதங்கள் மிகுந்த சிரமப்பட்டார். இந்திரா காந்தி கண்ணும் கருத்துமாய்த் தந்தை யைக் கவனித்து வந்தார் எனினும் 27-5-1964 அன்று நேருஜி மரணமடைந்தார். லால்பகதூர் சாஸ்திரி நேருவிற்குப் பின் லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் பதவி ஏற்றார். இந்திரா அந்த மந்திரி சபையில் தகவல் ஒலிபரப்பு அமைச்சராகப் பதவி ஏற்றார். அவர் செய்தித்துறை பொறுப்பு வகித்த போதுதான் எதிர்காலத்தில் வானொலி, தொலைக் காட்சி அமைப்புக்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று அவற்றிற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். 1965-ல் ப ா கி ஸ் த ா ன் படைவீரர்கள் காஷ்மீரில் ஊடுருவல் செய்தனர். இந்திரா பூரீநகருக்கு பறந்து சென்று ஜவான்களுடன் உரை யாடினாா. ஊடுருவல்-போராகிய போது; இந்திரா போர் முனைக்கே சென்றார். இறுதியில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.