பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 117 தந்தை மரணம் ராஜீவ் காந்தியின் 16-வது வயதில் அவரது தந்தை பெரோஸ் காந்தி காலமானார். தாயா ருக்கு ஆறுதலாக சிலநாட்கள் இருந்த ராஜீவ் காந்தி மேல்படிப்புக்காக லண்டன் சென்று அங் குள்ள இம்பீரியல் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு, அவர், மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பாடம் எடுத்துப் படித்தார். பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். லண்டனில் ராஜீவ் காந்தி தன்னுடைய படிப்பு நேரம் போக, மற்ற நேரங்களில் பகுதி நேர வேலை பார்த்து வந்தார். தனக்கென்று தனி யாக எந்த வசதியும் செய்து கொள்ளாமல், உடன் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து ஒரே அறை யில் தங்கி இருந்து அவர் படித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலுள்ள கிரேக்க ரெஸ்டாரண்டில் ஒருநாள் ராஜீவ் காந்தி முதன்முதலாக சோனியாமைனோவைச் சந்தித் தார். இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். ஸ்பெயின் நாட்டு மொழியில் தேர்ச்சி பெற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்து வநதாா. சோனியாவைப் பார்த்த உடனேயே ராஜீவ் காந்தி, 'இவள்தான் எனக்கு மனைவியாக வர வேண்டும்” என்று உள்ளுர விரும்பினார்.