பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 121 நுழைய மாட்டேன்,' என்று ராஜீவ் காந்தி சோனியாவிடம் வாக்குறுதி அளித்திருந்தார். இத்த அளவிற்கு சோனியா காந்தி அரசியலை வெறுப்பவர் என்று அறிந்திருந்ததினாலேயே, இந்திரா காத்தி ஒரு பேட்டியின் போது, "ராஜீவ் அரசியலில் ஈடுபட்டால், என் மருமகள் ராஜீவை விவாகரத்துச் செய்து விடுவார்’ என்று பகிரங்க மாகக் கூறினார். இப்படியெல்லாம் இருந்தும் கூட சூழ்நிலையும் சந்தர்ப்பமும், எப்படியோ ராஜீவ் காந்தியை அரசியலுக்கு இழுத்து விட்டன. அதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதை அனைவரோடும் சேர்ந்து சோனியாவும் ஒப்புக் கொள்ள வேண்டிய தாயிற்று. சஞ்சய் காந்தி மரணம் ராஜீவ் காந்தியின் சகோதரர், சஞ்சய் காந்தி 1980-ஜூன் மாதம் ஒரு விமான விபத்தில் உயிர் துறந்தார். உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள அமேதி தொகுதியில் மறு தேர்தல் நடத்த வேண் டிய தாயிற்று. அது வரை தன் விருப்பப்படி தன் குடும்பத் துடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த மகா-8