பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆப்ரகாம் லிங்கன் (1808 – 1865) 'அடிமை வியாபாரம் தவறில்லை என்றால், இந்த உலகில் செய்யப்படும் எந்தக் கொடிய செயலுமே தவறில்லையாகும்.' -ஆப்ரகாம் லிங்கன் ஒரு மனிதன் எக்குடியில் பிறந்தான்; அவன் எந்தச் சூழ்நிலையில் வளர்ந்தான் என்பனவெல் லாம் ஒன்றும் முக்கிய மானதல்ல. எக்குடிப் பிறப்பினும்; எத்தகைய வறுமைச் சூழலில் வளர்ந் தாலும்; ஒருவனுக்கு விடாமுயற்சியும்; உயர்ந்த லட்சியங்களும் இருந்தால் அவன் ஒரு நாள் உலகில் உயர் நிலையை அடைவான்; பெரும் புகழ் பெற்று மக்களால் போற்றப்படுவான் என்பதற்கு ஏழ்குடி யில் பிறந்த ஆப்ரகாம் லிங்கனின் வாழ்க்கை ஒர் சிறந்த எடுத்துக்காட்டு. ... " வட அமெரிக்காவில் கென்டக்கி என்று ஒரு மாநிலம். அதைச் சார்ந்த ஹாட் ஜென்வில்' என் னும் ஊரின் அருகேயுள்ள ஒரு காட்டுப் பிரதேசத்