பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 4; கள்; பல பள்ளிகள் என மாறிக் கொண்டே வந்த தில் லிங்கனுடைய மொத்த பள்ளிக் கல்வி நாட்கள் சுமார் ஒரு ஆண்டுகள் தான் இருக்கும். ஆயினும் அவர் தமது பொது அறிவைக் கொண்டு பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். பகலெல்லாம் பண்ணையில் கடுமையாக வேலை செய்வார். இரவில் வெகு நேரம் கண் விழித்துப் படிப்பார். 'என் வீட்டைச் சுற்றி ஐம்பது மைல் சுற்று வட்டாரத்திற்குள் நான் படிக்காத புத்தகங் களே கிடையாது” என்று லிங்கன் கூறியுள்ளார். எப்படியும் தான் ஒரு சிறந்த கல்விமானாகி விட வேண்டும் என்கிற முயற்சியை அவர் ஒரு போதும் நிறுத்திவிடவில்லை. தந்தையிடம் விடை பெற்றுக் கொண்டு லிங்கன் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். எங்கு போவது? என்ன செய்வது என்று புரியாத நிலை. நீண்ட தூரம் நீண்ட நாட்கள் நடந்து சென்று கொண்டே இருந்த லிங்கன் நிரூசலாம என்ற இடத்தை அடைந்தார். o அங்கு ஆபெட் என்பவரின் பல சரக்குக் கடை யில் முதன் முதலாக வேலைக்குச் சேர்ந்தார். கடை வியாபாரத்தைப் பற்றி ஏதுமறியாத லிங்கனை சில மாதங்களுக்கெல்லாம் ஆபெட் வேலையை விட்டு நிறுத்தி விட்டார். வேலையிழந்த லிங்கன் வட அமெரிக்காவி லுள்ள இல்லினாய்ஸ் என்ற நாட்டுக்குச் சென்