பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'54 ■ மகாத்மா காந்தி முதல் அவரது குழிவிழுந்த கண்களின் அடிவாரத்தி லிருந்து கண்ணிர் பெருக்கெடித்தது. அதைக் கைக்குட்டையால் துடைத்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்போ, உணர்வோ இன்றி காரில் ஏறி அமர்ந்து சென்று விட்டார். 'இந்த சம்பவத்திற்குப் பிறகு லிங்கன் மன அமைதி இழந்தார். அடிமை முறையைப் பற்றி அவர் அறிந்திருந்ததை விடக், கண்டதும், கற்றுக் கொண்டதும் மிக அதிகம். - இந்த அப்பாவி அடிமைகளுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கும் வரை, என்னால் நிம்மதி யாகத் தூங்க முடியாது; அதற்காக, நான் என் முழு சக்திகளையும் பயன்படுத்திப் போராடுவேன்' என்று மனதில் உறுதி பூண்டார். ஐக்கிய நாடுகளின் பொது அரசியல் மன்றத் தில் அடிமைத் தனத்தை அறவே ஒழிக்கும் தீர் மானம் ஒன்றை நிறைவேற்றிக் கொண்டுவநதார். "மக்கள் அனைவரும் சுதந்திரம் உடையவர்கள். நாட்டில் உள்ள மக்கள் எல்லோருக்கும் சம உரிமை உண்டு. அதனை எவரும், எக்காரணம் கொண்டும் பறிக்கக் கூடாது. அடிமைகளை வைத்து வேலை வாங்கு வது என்பது-நாகரிகமுடைய சமுதாயத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாகும். #