பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மகாத்மா காந்தி முதல் நாட்டுக்கு உயிர் கொடுத்த வீரர்களின் தியாகம் நமக்கு நல்லறிவு ஊட்டுவதாக இருக் கட்டும். நம் நாட்டிலும், பிற நாடுகளிலும் என் றென்றும், நிலையான அமைதியும், சமாதானமுமே நிலைத்திருக்கட்டும்” என்று பேசி முடித்தார். லிங்கன் கூறியபடியே தென்னாட்டவர் தங்கள் பகையை மறந்து செயல்பட்டனர். (βι μπ πί முடிவதற்குள் ஆப்ரகாம் லிங்கன் இரண்டாம் முறையாகவும் குடியரசுத் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போர் நிலையாக நிறுத்தப்பட்டு, போர் மேகங்கள் கலைந்து சென்று ஐந்து நாட்கள்தான் ஆகியிருந்தன. வடக்கு தெற்கு ஆகிய இரு நாட்டாருக்கும் இடையே ஒர் சுமுகமான உடன்படிக்கை ஏற்படு வதற்குள் யாரும் கனவுகூட கண்டிராத ஒரு கொடிய செயல் நிகழ்ந்துவிட்டது. 1865-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் நாளன்று இரவு லிங்கன் தமது மனைவியுடன் ஒரு நாடகத் திற்குச் சென்றிருந்தார். அவருக்கென்று பிரத்தியேகமாக அமைக்கப் பட்ட இடத்தில் அமர்ந்து நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது