பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜான் எஃப் கென்னடி ( 1917–1963) 'காடு நமக்கு என்ன செய்தது என்று எண்ணிப் பாப்பதைவிட நாட்டிற்காக நாம் என்ன செய்தோம்: என்று எண்ணிப் பார்ப்பதே சிறப்பாகும்." -ஜான் கென்னடி ஜான் பிட்ஸ் ஜெரால்ட் கென்னடி அமெரிக் காவின் புகழ் ஜனாதிபதிகளுள் ஒருவர். 35-வது ஜனாதிபதியாக அவர் பதவி வகித்தபோது அவரது காந்தக் கவர்ச்சியால் உலகம் முழுமையுமே அவர் பால் ஈர்க்கப்பட்டது. தமது 46-வது வயதில் கொடியவன் ஒருவன் குண்டுக்கு அவர் இரையாகிப் போனபோது உலகம் முழுதும் திரண்டு கண்ணிர் சிந்தியது. மூன்றே ஆண்டுகள் பதவி வகித்தாலும்: பதவியை மீறி உலக மக்களிடம் அவர் காட்டிய மனிதாபிமானத்திற்காகவும் மனித சமூகத்தின் மேன்மையில் அவர் வைத்திருந்த அசைக்கமுடியாத