பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'64 மகாத்மா காந்தி முதல் தன் சக மாணவர்களை விட கென்னடி எதிலும் சற்று துணிச்சல் மிக்கவராகவே விளங்கினார். படிப்பிலும், விளையாட்டுக்களிலும் கவனம் செலுத்திக் கொண்டிருந்த கென்னடியின் மனதில் அரசியல் ஆர்வம் மெல்ல வளரத் தொடங்கியது. காலையில் எழுந்தவுடன் அன்றாடம் வரும் தினசரிகளை மிகுந்த ஆர்வத்துடன் வரிவிடாமல் படித்து முடிப்பார். செய்தித்தாள்களில் வரும் நாட்டு நடப்பு களைப் பற்றியும், அரசியல் தொடர்பான விஷயங் களையும் ஆழ்ந்து படிப்பார். பின் அவைப் பற்றித் தன் சக மாணவர்களுடன் விவாதிப்பார். o சிலரது பிரபலமான கட்டுரைகளைப் படிக்கும் போது, "நாமும் ஏன் இதுபோல் அரசியலைப் பற்றி எழுதக்கூடாது, இவர்களைப் போல் அரசி யலில் ஈடுபட்டு, நாமும் ஏன் நாட்டுக்காக உழைக் கலாகாது” என்றெல்லாம் எண்ணிக் கொள்வார். இப்படிப்பட்ட சிந்தனைகளின் விளைவாக, "இங்கிலாந்து ஏன் துரங்கியது?” என்ற தலைப்பில் அருமையான ஒரு நூல் ஒன்றைஎழுதி புத்தகமாக வெளியிட்டார். அந்த நூல் நன்கு பிரபலமாகி கென்னடிக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தது.