பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 65 இது கென்னடி சற்றும் எதிர்பாராத ஒன்று. தம்முடைய முதல் நூலுக்குக் கிடைத்த வரவேற்பு; அவருக்கு தமது எழுத்தாற்றல் மீது மிகுந்த நம்பிக்கையை ஊட்டியது. முதல் முயற்சி வெற்றி அடைந்து விட்ட தல்லவா; மகிழ்ச்சிக்குக் கேட்பானேன்: கென்னடி தொடர்ந்து எழுதத் துவங்கினார். பல்கலைக் கழக தொடர்பைவிட, பத்திரிகைத் துறை அவர் மனதை மிகவும் கவர்ந்தது. அதில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அப்போது இரண்டாவது உலகப் போர் ஆரம்பமான நேரம், பத்திரிகைத் தொழில் பற்றிய சிந்தனையை விட்டு, திடீரென்று, "நாமும் போரில் ஈடுபட்டு, நம்மாலான சேவையை நாட்டிற்காகச் செய்தால் என்ன” என்று எண்ணலானார். இந்த எண்ணத்தின் ஆர்வம் அவரை கப்பற் படையில் சேர்வதற்கான ஆர்வத்தை வளர்த்தது. அதற்காக விண்ணப்பித்தார், கென்னடியின் விண்ணப்பத்தை கடற் iലെ அதிகாரிகள் ஏற்க மறுத்து விட்டனர். இவரது முதுகெலும்பு பழுது பட்டிருந்ததே அதற்கு காரணம்.