பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 89 நான் ஒரு கனவு கண்டேன் "அந்தக் காலத்தில் அடிமைகளாக இருந்தவர் களின் மகன்களும்: எஜமானர்களாக இருந்து கொடுமைப் படுத்தியவர்களின் மகன்களும் ஒரே மேஜையில் சகோதரத்துவ உணர்வுடன் அமர்ந்து பேசும் காலம் வரும் என நான் கனவு காண் கிறேன்..." "என்னுடைய நான்கு குழந்தைகள்- அவர் களுடைய நிறத்தைக் கண்டு மதிப்பிடப் படாமல், அவர்களது குணத்தையும், திறன்களையும் வைத்து மதிப்பிடப்படும் ஒரு காலம் வரத்தான் போகிறது என நான் கனவு காண்கிறேன்” என்று கிங் ஒரு தீர்க்க திரிசியை போல் அந்தப் பேரணி கூட்டத் தில் முழங்கினார். வரலாறு காணாத கிங்கின் அன்றைய பேரணி யும்; கேட்டவர்களின் நெஞ்சை உருக்கும் வண்ணம் அவர் தம் கனவை வருணித்த விதமும், ஆற்றிய அரிய சொற்பொழிவும் உலக மக்களின் மனதை நெகிழச் செய்து விட-டது. சிவில் உரிமைகளின் தார்மீக அடிப்படைகளை கிங்கைப் போல் அத்தனை தெளிவாகவும்; அழகாகவும், அஹிம்சாமுறையில் போராடியும்; பேரணிகள் நடத்தியும் அதுவரை யாரும் சொன்ன தில்லை. மகா-6