பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 9 தன்னுடைய ரதிக்கிளியான கிழவியை விழுங்கி விடுகிற மாதிரி பார்த்தார் அவர். கிழவி என்றால், வெட்கமான வெட்கம் வரக்கூடா தென்று சட்டமா, என்ன? அந்த நாளிலே, அழகுக் கலாபமயிலான அங்கா ளம்மையின் வெட்கத்தைக் கண்டும், ரசித்தும் வெட்கப் படாமல் அவளைக் கட்டிக்கொண்டவர் இந்த சாம்பான் என்பது சிதம்பர ரகசியம்'... 'மச்சான்காரவுங்களே!’’

  • * 3 ×

'இந்தாலே பாருங்க, ஒங்களைத்தானுங்களே?' தொட்டுணர்வின் இனிமையான சுகத்தில் முதியவர் இன்பமான சொர்க்கத்தை உணர்ந்திருக்க வேண்டும். சொப்பனம் கண்டு விழிப்பவர் போன்று, விழிகளை மூடி மூடித் திறந்தார். 'ஏ, புள்ளே! ஒனக்குச் சங்கதி தெரியுமாங்காட்டி?... ஊர் நாட்டுக்கு ஒசந்த கண்டிச்சீமைக் கங்காணி முத்து வீரப்பத் தேவர் ஐயா நம்ம குடிசைக்குத் தேடி வந்து, நாளைக்குக் காலம்பற நடக்கப்போற காந்தி செயந்திச் செலவுக்கு நூத்தியொரு ரூவா தந்தாராக்கும்! ஆமாடி, அங்காளம்மே!-இது நம்ம தாராடிச்சாமி, சத்தியமாய் மெய்யான தாக்கலாக்கும்!' என்றார் சாம்பான். வாயெல்லாம் பல் இல்லை, சிரிப்பு: அடங்காச் சிரிப்பு; அது ஆனந்தச் சிரிப்பு. - காந்தியைக் கொண்டாடுறதுக்குக் கங்காணி. எசமானரு நூத்தியொரு ருவாய் குடுத்தது, மெய்யா லுக்குமே நூத்திலேயொரு சேதிதானுங்க, மச்சானே?" "இந்த நடப்புத் தாக்கல் நாளைக்கு விடிஞ்சதும், விடியாததுமாய் ஊர் முச்சூடும் ரவி, கங்காணியைப்