பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 115 பேனும் மண்டையைத் தாண்டிக் கொண்டு வந் திருக் குமோ?-கிழவர் இருந்திருந்தாற் போலத் தனக்குள்ளாக ஒரு சிரிப்புச் சிரித்துக் கொண்டார். ஒர் இமைப்பிலே, அச் சிரிப்பு மறைந்துவிட்டது! கிழவர். கிழவர் என்றால் அவருக்கும் பெயரென்று ஒன்று இருக்குமே? இருக்கும், இருக்கும்-ஆனால், அந்தப் பெயர் யாருக்குத் தெரியும்: ஆலமரத்தடிக் கிழவர் என்றால், சுற்று வட்டை யில் ஏகப் பிரசித்தம். கறார்ப் பேர்வழி. எழுபத்திரண்டு வருஷம் தன் ஜீவனைக் காபந்து செய்து கொள்ளப் பழகி விட்ட அசகாய சூரர் அல்லவா அவர்? மிஸ்டர் எமதர்ம ராஜனுக்கு டேக்கா சொடுக்கப் பழகிவிட்ட படுசமர்த் தராம் கிழவர்! -பேசிக் கொண்டார்கள்! அந்த ரகசிய மும் அவர் வரை ஒரு மர்மம்தான்! ζι (H so 姆婷 酸登 ( ) சிந்தனை வசப்பட்ட நிலையிலே, காய்கறிக் கடையை மறந்து, அந்த ஆட்டை கண் பாவாமல் பார்த் தவர், கண்முடிக் கண் திறந்த வேளையில். அந்த ஆடு நல்லதனமாக அங்கிருந்து நகர்ந்து விட்டதைக் கண்டு கொண்டார். அவரது இமைகளில் ஈரம் பனித்தது. மனுஷங்க பாஷை தெரிஞ்ச வாயில்லாச் சீவன்... பாவம்! வாயுள்ளதாலே இந்த மனுசங்களுக்கு என்ன பிரமாதமாக் கொட்டுதாம்? ம்... எப்படியும் சாண் வயித்தைக் கழுவி மூடிக்கிடத் தெரியும். அம்புட்டுத்தானே!. ம்... அப்பாலே, கடோசீலே, அல்லாம் பிடி சாம்பலாகப் பூட வேண்டியதுதானே?... சே என்னா சென்மம்டாப்பர் இது பிறவா வரம் வேணும்னு அனுபவிச்ச புண்ணிய வான் யாரோ பாடினார்!...-சுருட்டு சுட்டுவிட்டது போலும் உதறினார். சாம்பல் தாள் பறந்தது.