பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 1 : 7 வழி சொல்லிக் கொண்டிருந்தவர் கிழவர். வேர்வை வழிந்தது. இருந்தும், கந்கல் துவாலையை எடுத்து உதறக் கூட நினைவின்றி, அதை எண் சாண் உடம்பைச் சுற்றிப் போர்த்திக் கொண்டார். அட்டனைக் காலிட்டுக் குந்தி யிருந்தவரை பைசாச் சுருட்டு தேடி வந்தது. "தாத்தா...' "வாப்பா, பேராண்டி!' மேனி ஒரே முட்டா நடுங்குதே காயலாவா?’’ 'என்னமோ, அப்பிடித்தான் படுது!' அப்படின்னா எல்லாத்தையும் தூக்கி ஒங்க எதாஸ்தானத்திலே போடடுப்பிட்டு, பூத்து படுக்கறது தானே?... இவ்வளவு வயசானப்பறமும் இப்பிடிக் கஷ்டப் பட்டு யாருக்குச் சேர்த்து வைக்கப் போறிங்க? இப்பதான் ஒங்க கையிலே ரொம்பச் சேர்ந்திருக்கிறதா ஒரு பேச்சு சதா அடிபட்டுக்கிட்டு இருக்குதே, இந்தச் சாலை நெடுக!' கிழவர் தனக்கே உரிய மர்மத்துடன் கடகட வென்று சிரித்துக் கொட்டினார். அள்ளத்தான் ஆள் இல்லை, பாவம்! சிரிப்போடே சொல்கிறார்: பேராண்டிக்கில்லே சொல்லுறேன். நான் நித்தம் உழைக்காட்டி, என்னோட சாண் வயித்தை வஞ்சனை செஞ்சிடுறதாய்த்தானே அருத்தம்: ஊர்னா, யாரும், யாரைப் பத்தியும் எப்பவும் எதுவும் பேசிக்கிடுவாங்க. இது சகஜம்தான் பணம் காசுன்னாக்க, யாருக்குத்தான் ஆசை வராது? நானும் கேவலம் ஒரு மனுசப் படைப்புத்தானே?" - தாத்தா பேச்சு எப்பவுமே மூடு மந்திரம் கணககு தான்! * 9. 1D-8