பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மகாத்மா காந்திக்குஜே! அதோ, வித்தைக்காரன்! -என்ன உறக்கம்... என்ன உறக்கம்! 'ராத்திரி நல்லாயிருந்தாரே, முத்துமலை அம்பலம்?’’ 'நல்லாத்தான் இருந்தார். போன கிழமையாச்சும் லேசா காயலா இருந்தாரு. நேத்தைக்கு ராவு யாதொண் லும் இல்லே, வரக் காப்பி குடுத்தான் பேராண்டி. அப்பாலே, வளமைப்படி சாமான் சட்டுகளை உள்ளாற. துாக்கியாந்து சரி பார்த்து வச்சிட்டு, சுருக்குப் பையை எண்ணிக் காட்டி எங்கிட்டே ஒப்படைச்சிட்டு, இந்த வெளித் திண்ணையிலேதான் படுத்தாரு கோழி கூப்பிட, வேம்பாவைச் சூடு பண்ண ஏந்திருச்சேன். அவரு காலை மிதிச்சுப்பிட்டேன். திரும்பிப் பார்த்தேன். ஆளு முண்ட லை, முடங்கலை. சம்சயம் தட்டிச்சு. லாந்தரைப் புடிச்சு மூஞ்சியைப் பார்த்தேன். வெறும் கட்டைதான் மிச்சம்...'-முத்துமலைக் கிழவர் கண்ணிரை வழித்து விட்டார். "ஆமா, இங்கிட்டு வந்து வெகு தொலைக்குச் சொத்து சேர்த்து வச்சாராமே? அது சங்கதி ஒமக்குத் திரத் தெரியணுமே?' என்றார் தேவர்-சன்னாசித் தேவர். அந்தச் சங்கதியை அந்தக் கிழவரைக் கேட்டால் தான் தெரியுமுங்க...' குரல் நெகிழ்ந்து ஒலித்தது. அதெல்லாம் சொல்லித் தெரியிற தாக்கலா? என்ன இருந்தாலும், முத்துமலை அம்பலம் யோகக்காரப் புள்ளி தான்...' ஆமா, ஆமா... விரிச்சுப்படுக்கறதுக்கு நிழல் குடுத்தாரில்லே?" . வெட்டிப் பேச்சு ஏதுக்கு?. பொணத்தைத் தூக்கற துக்கு வழி பண்ணுங்க. ஆளுங்க நாலு பேரைப் பிடிங்க, இம்ப்லம். என்றார் மனி.