பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மகாத்மா காந்திக்கு ஜே: கேட்கவில்லை. ஆத்திரத்தில் புத்தியில்லாமல், திட்டி விட்டேன் ரோஷக்காரர் அவர் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல், வீசின. கையும் வெறுங் கையுமாக இரவோடு இரவாக வெளியேறிவிட்டார், என் தெய்வம்! இது வரை தேடாத இடம் இல்லை, போடாத விளம்பரம் கிடையாது. நாங்கள் குடும்பத்தில் பயித்தியம் பிடிக்கும் நிலையில் இருந்து வருகிறோம்!...ஆகவே, இந்தப் புகைப் படத்திலுள்ள பெரியவரை இனம் காணும் புண்ணிய வான் யாராகயிருந்தாலும், உடனே ரகசியமாக கீழுள்ள என் விலாசத்துக்குத் தந்தி கொடுத்து உதவும்படி ரொம்ப வும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன். கோடிப் புண்ணியம் கிடைக்கும்! ... அவர்களுக்கு வேண்டும் பணத்தை அள்ளிக் கொடுப்பேன். அங்காளம்மை பேரில் ஆணை இது!...” கத்தரிக் காட்டுக் கிழவர் உணர்சகி வசப்பட்டுச் செருமலானார்: மனுசர் விதியோடே எப்படி எப்படி யெல்லாம் விளையாடிப் பார்த்திருக்கார்?... அட கடவுளே!' - -- மணி முகத்தைத் துடைத்துக் கொண்டார். "மணி இந்தாங்க, பத்து ரூபாய்த்தாள் இருக்கு. சைக்கிள் ஒண்ணு எடுத்துக்கிட்டு அறந்தாங்கிக்குப்போயி, அந்தப் பத்திரிகையிலே கண்டிருக்கிற விலாசத்துக்கு ஒரு எம்ம சன்டு தந்தி பேசிட்டு வாங்க. நம்ப கிழவனா ரய்யாவோட மகனை உடனே புறப்பட்டு வரும்படி மட்டும் பேசுங்க.போதும் பாவம் முத்துமலையின் சாயத் துண்டு ஈரத்தால் கனத்தது! ஆலமரத்தடிக் கிழவர் எத்துணை மகத்தான ரோஷத் தோடு உறங்கிக் கொண்டேயிருக்கின்றார்!... உறங்க்ட்டும் உறங்கட்டும்!. எழுப்பி விடாதீர்கள்...!