பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமதி சிற்றம்பலம் f இடை நேரத் தூக்கத்தை முடித்துக் கொண்ட கையுடன், கைக்கடிக்காரத்தைப் பார்த்தார் திருவாளர் சிற்றம்பலம். மணி மூன்று-பிற்பகல். கோடை வெயிலின் வெம்மை குறைந்ததாகத் தோன்றவில்லை. அன்றைய சீதோஷ்ண நிலையின் கதி அப்படி இருக்கக்கூடும். மெத்தையைச் சுற்றி வைத்துவிட்டு, மண் கூஜாவைக் கவிந்து நீர் எடுத்து முகத்தைக் கழுவித் துடைத்தார். டவல் உதவியது. கைகால்களை முறை பிசகாமல் நீட்டி நெளித்து முடித்தவுடன், நிலைக் கண்ணாடியின் முன்னே போய் நின்றார் அவர் வகிடு ஒய்யாரமாக அம்ைந்தது. முன்புறப்பகுதியிலே, அங்கொன்றும் இங்கொன்றும்ாக நரை முடிகள் சில பல்லை இளித்து அம்பலப்படுத்தின. அக்காட்சியைப் பார்த்தவுடன். அவர் மனம் வெதும்பி னார். நெடுமூச்செறிந்தார். மறுகணம், அவர் மனக் குறையை விரட்டினார். கண்ணாடியில் தெரிந்த தம் முடைய அழகிய உடலின் வலுவும் கைகளிலே தென்