பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 மகாத்மா காந்திக்கு ஜே: பட்ட தசைக் கரணைகளும் அவருக்குப் புதுத் தெளிவை அளித்திருக்க வேண்டும். அதன் விளை பலனாக, சோர்வு அழிந்திருக்க வேண்டும்! முறுக்கு மீசை கறுத்துத் தழைத்துப் பொலிந்தது!.. நடந்து வந்தார். மாடியறையின் முன்பகுதிக் கைப் பிடிச் சுவரைப் பற்றியபடி நின்றார். ஜாஸ் சங்கீதத்தின் ஒலி அசைவின் அலைகள் கீழ்த்தளத்திலே விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றின் எதிரொலி படியேறி வரத் தப்பவில்லை. குறையத் தலைப்பட்ட சூட்டின் அணைப்பில் மிதந்து விந்தது இளங்காற்று. அண்டியிருந்த வேப்பந்தழைகளின் கைங்கர்யம் அது. - • f : * 'ஐயா ... அழைப்பின் பாசத்தை மட்டும்தான் அவர் அறிவார் என்பதல்ல; அந்தப் பாசத்திற்கு வாய்த்த அவ்வுருவத்தை யும் அறிந்தவரே. உருவத்தை அறிந்தவருக்கு அவ்வுள்ளத் தைத்தானா தெரியாது?

  • * G, সে ৫৫ g T৫ঠতf}?... ' '

கேள்வியின் பாசத்தில் அன்பின் பரிவு விடையாகத் தொனிக்கவில்லையா? 'சூப் கொண்டா ந்தேனுங்க!” "ஆல் ரைட்...' முகத்தை நிமிர்த்தி அந்தப் பெண்ணைப் பார்த்தார்; நுட்பமான நளினத்துடன் அவள் விளங்கினாள். பண்ணிப் பெண் என்ற தகுதியைப் பாதாளத்தில் தள்ளிவிட்டு, அவள் அழகு உச்சியில் உச்சம் பெற்றிருந்தது. 'சாப்பிடுங்க...நெஞ்செலும்பு சூப்' ஒகே.