பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 மகாத்மா காந்திக்குஜே! ஆரோக்கியத்தின் ரகசியமாக-வாழ்வின் சமநிலைத் திட்பமாக அவர் தோன்றினார். - 'இரும்பு போன்ற தசைகளும் எஃகு போன்ற நரம்பு களும், எதனாலும் தடுக்க முடியாத அளவற்ற சக்தியும் வாய்ந்தவர்களே நாட்டின் பாதுகாப்புக்குத் தேவை!’ என்ற சுவாமி விவேகாநந்தரின் உண்மைக் கூற்றுகள் அவருள் ஒரு புரட்சியாக உருப்பெற்றது. அப்புரட்சியின் பலனாக, அவரது சோனி உடல் வல்லமை எய்தி, ஆண்மையின் விர்யம் மிகுந்து விளங்கியது. வறுமை அவருள் செய்த தொண்டினை உதறி விட்டு, அவர் நாட்டுக்குத் தொண்டு இயற்ற முனைந்தார். அம் முனைப்பைப் பின்னுக்கு இழுத்தது தரித்திரம். எனவே, காடுகளுக்குப் போய் தவம் செய்து, இந்த நல்குரவுக்குப் பாடம் போதிக்கத் திட்டமிட்டார். அது தருணம், யதேச்சையாக நிழலுக்கு ஒதுங்கினார். தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தாள் சாரதா. அவளே அவருக்கு வாழ்வின் நிழலானாள்; வாழ்வின் வளப்பத்துக்கு நீர் ஊற்றும் சீதேவியானாள். நீரினின்றிம்நீர் பிரியமாட்டாத பாந்தவ்யம்! பாசம்! - எதிர்பாராத முடி விலே எதிர்பாராத ஆரம்பம் உதயமானது. 'என் வாழ்வே ஒரு கதையாட்டந்தான் இருக்குது!... மனைமாட்சியும் நன்மக்கட் பேறும் கிட்டின. அவர் செய்து வந்த பிரார்த்தனைகளின் விளைவு நல்ல பயன் சொல்லி வந்தன. தடம் என்றால் திருப்பம் இருந்துதானே திர வேண்டும்' - - வந்த திருப்பம் சாரதாவை விழுங்கி விட்டது:. முழுக்கைச் சட்டையை இழுத்து விட்டுக் கொண்டு குறுக்கு மறித்து நடந்தார். மஸ்லின் வேஷ்டியின் ஒரு