பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H.3% மகாத்மா காந்திக்கு ஜே! விட்டாளே!. கடிவாளம் மாட்டப்பட்ட புரவியாக அழுதது அவர் மனம். -- . கூட்டம் தெரிந்தது. உள் மனத்தில் கசிவின் ஈர்த்தை மனத்தெம்பு துடைத்தது. ரூபாயை எண்ணிக் கொண்டேயிருந்தான் மணி பாலன். அவன் தலைச்சன். இந்தக் கடைக்கு அவன் பொறுப்பு. அவனது உடம்பு கொஞ்சம் வெளுப்புத் தட்டி விருந்தது. அதுவும்தான் எட்டுப்பிள்ளைகள் வரை ஜாபிதா வளர்ந்து விட்டதே. அயர்வுக்காக காபி வந்தது. குடித்தான். பயந்து பயந்து குடித்தான். காரணம் இதுதான்: 'அப்பாவுக்கு விஸ்டம்னா'ஸிஸ்டம் தான். எதுவுமே திட்டப்படிதான் நடக்கும். விதி என்பது மனத்தில்தான் சங்கற்பம் பெறுகிறது; ஆகவே, நம் மனசையே கண்ணாடியாக்கிக் கொண்டால் விதியை நித்ததித்தம் நாம் பார்த்துக் கொள்ள் முடியும்னு அப்பா சதா சொல்வாங்க! என்னவோ, அப்பாவே ரொம்பப் பேருக்கு ஒரு புதிராகத்தான்தோணுவார் எங்களுக்கோ அப்பா எப்பவும் ஓர் அதிசயமாகவே தோனுவார்: அப்பாவை, எழுபத்திரண்டு வயசு வாலிபர்னுதான் எல் லோரும் சொல்லுவாங்க!” - தேவலோகமாய்த் திகழ்ந்தது ஜவுளிக் கூடம். சிற்றம்பலத்தின் தோழர்கள் வரவே அவரும் எழுந்து உளளே சென்றார், தொடர் நிழல்களுடன் பாரிஸ் அழகிகளின் லீலா விநோதங்களைச் சித்திரித்த பட மொன்று புதிய தியேட்டரில் ஒடுகிறத்ாம். துணை சேர்த் தார்கள். சிற்றம்பலம் ஒப்பவில்லை. ஒய்வு அவருக்கு அருமருந்து. அப்போது அவருக்கு இணைப்பு கொடுத்துத் தொலைபேசி கூப்பிட்டது.