பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五3岛 மகாத்மா காந்திஜிக்கு ஜே! வழக்கமாக நெளியும் ஒர் ஆவல் உந்தியது. நடந் தார். மாடி ஹாலிலே அலங்கரிக்கப்பட்டிருந்த பட்ங்களை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, அப்புறம் அந்த ஒரு போட்டோவை மாத்திரம் எம்பி எடுத்தார். சாரதா மரிப்பதற்கு ஒரு மாதம் முன்னம் எடுக்கப் பட்ட படம். அவருடைய குடும்பத்தின் உருவப்படம் அது மணிபாலன் - மாலதி, மணிநாதன் - வடிவு: சரவணன் - சாந்தி. இப்படி ஒரு 'செட்”. அடுத்து, மணிமாறன். ஒண்டிக் கட்டை'... அதோ, பெண்கள் இருவர்: சாருபாலா, சாருமதி!... இருவரும் அவரவர் புருஷன்மார்களுடன்: அங்கங்கே குழந்தை குட்டிகள் அவரவர் குடும்பத்துடன்... நட்ட நடுவில் சிற்றம்பலம்சாரதா ஜோடி! . கண்களை மூடிக் கொண்டார் பெரியவர். ஒர் அரைக் கணம் மோன நிலை! . சாரதம் நீ பொய் அல்ல; நீதான் நிஜம்... பொய்யாக இருந்த எனக்கு மெய்யின் உருவம் வழங்கிய தேவி நீ...' - திடுதிப்பென்று அவருக்குத் தமது முதல் இர்வின் ஞாபகம் சுடர் தட்டியது. மனத்தை என்னவோ செய்தது. சஞ்சலமும் சிரிப்பும் கை இணைத்து வலம் வந்தன. - . * グ * * х . . இதயத்தில் அமைதியை வரவழைக்க வேண்டி, அவர் மாடித் தாழ்வாரத்தில் நடந்தார். உடற்பயிற்சிச் சாத னங்கள் கிடந்தன. தன்மயமான கர்வத்திளைப்பில் ஊறினார் அவர் ஆளுயர கண்ணாடி அழைத்தது. போய் நின்றார். நாடகக்காரன் வேடப் பொருத்தத்தைச் சரி பார்த்துக் கொள்ளுவதையொப்ப அவர் பார்த்துக்கொண் டார். நான் இனி எந்த வேடம் கட்டப் பேர்கிறேன்.