பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மகாத்மா காந்திக்கு ஜே! பாராட்டுதலையும் பெற்றுவிட்ட ஒர் அபூர்வ ராகம் போல! குழந்தை முன்புறப் பூங்காவுக்கு வந்துவிட்டது. வேர்வையை துண்டுகொண்டு ஒற்றியபடி, சிரிப்பின் வழியிலே தடம் ஒற்றி நடந்து, சிரிப்புக்குச் சிரிப்பையே பரிசிலாகக் கொடுத்து, குழவியை எடுத்துத் தோளில் சாய்த்துக் கொண்டார். மணிபாலன் டிக்காக உடுத்துக்கொண்டு வந்து நின்றான். தம்பியை அழைத்துவர விமான நிலையத் துக்குப் போகப் போகின்றான்! சிற்றம்பலம் அங்கிருந்தபடியே ராணியை அலட்டி னார். ராணி கவரிமானென ஓடிவந்து மறுகி நின்றாள். மணிபாலனைக் கண்டதும் அவள் மெளனம் அமைந்து நின்றாள். சிற்றம்பலம் தந்த சாவிக்கொத்தைத் திரும்ப அவரிடம் நீட்டியபோது, ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை யும் நீட்டினாள். அதை அவர் தம் புதல்வனிடம் கொடுத்தார். அவன் புறப்பட வேண்டியவன். ஆனான். புறப்பட்டால் போதும் என்னும் சுழலுக்கு ஆளான கட்டத்தில் இருந்தவனுக்கு விடை கிடைத்தால் போதாதா என்ன? பேரனை மருமகளிடம் ஒப்படைத்தார். குளியலறைக் குள் பிரவேசித்தார். 'ஹம்மிங்' ஒலி கிளம்பியது. வங்கோடு திகழ உள்ளே இருந்தவரின் கையில் சோப் டப்பாவைத் திணித்துவிட்டு நகர்ந்தாள் ராணி-பணிப் பெண். - - . . . . . . உதயத்தின் கோலம் புள்ளிக் கோலம் இழைக்கத் தொடங்கிவிட்ட பொன்மயமான மாயப் பொழுதல்லவா அது : - - -