பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 மகாத்மா காந்திக்கு ஜே! 'இன்னும் கொஞ்சம்...' 'ம்...உன் மாமூல் உபசரணை ...நடக்கட்டும்!...” மெல்லிய நகைப்பொலி அரவம் காட்டியது. ஊஹூம், அரவமன்று!... மோர் குடித்தார். எச்சில் பிளேட்டுடன் அவள் நின்றாள். அன்றிருந்த பாங்கிலேயே இன்றும் ஒரு தடுமாற்றப் பாவனையுட னேயே ராணி நின்றாள். அவர் அவளைப் பார்த்தார். மதுக்குடம் ஏந்தி நின்ற மணமலராய்ப் பொலிவுற்று நின்றாள் அவள். இனக் கவர்ச்சி குரலெடுத்துப் பாடாத பகுதி இல்லை!... வசந்தம் புறப்பட்டதா? தேவமனோஹரி பண் பரப்பியதா? மனோரஞ்சிதம் மகிழ்ந்ததா? பூலோக சொர்க்கம் இதுதானோ?. ஆண்மையின் வீர்யம் கிளர்ந்தெழுந்தது! அவர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். "ஈசனே!’ சமன் நிலை கொண்டார். "ராணி...' என்று பரிவுடன் குரல் தந்தார். வேர்வை ஒடியது. "ஐயா! நான் போய் விடட்டுமா? ஏச்சும் பேச்சும் கூடுதலாப் போயிட்டது... இங்கிருந்து போயிடத்தான் போறேன்! ஆமாம்!'-தேம்பினாள். இதழ்க் கண்டயில் ஆழுகை கண் விளிம்பில் சுடுநீர். கண்ணிரைத் துடைத்தார் அவர்.