பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 மகாத்மா காந்திக்கு ஜே! 'தம்பி, இவள் பெயர் ராணி!... உங்க அம்மா போன துக்கப்புறம் இந்தச் சின்னப் பெண்தான் என்னை கவனிக் சுக்கிட்டு வருது! ம்!' ராணியைப் பற்றிய அறிமுகத்தைத் தன் தந்தையின் வாய்மொழியாகக் கேட்ட மணிமாறன் மிகவும் அமைதி கொண்டான். அப்பா படிச்சது அதிகமில்லாவிட்டாலும் உலகத்தையும் உலகோரையும் படிச்சது ரொம்ப ஜாஸ்தி! ரியலி.ஏ...இன்ட் ரடக்ஷன்: எஸ். எளிய - இனிய தேவதை போலல்லவா தோன்றுகிறாள் இந்தப் பெண்...” இன்னும் கொஞ்ச நேரம் பார்க்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு கூடவில்லை. . அவள் போய் விட்டாள். மணிமாறனை நோக்கித் தம்முடைய பார்வையை நாட்டிய வேளையில், அவன் தவழ்ந்து சென்ற அழகின் சுவைப்பில் மனம் கிறங்கிப்போனதை இனம் கண்டு கொண்டிருப்பாரோ? மூத்தவனைக் கடைக்கு ஏவினார். கடல் கடந்து வந்தவனை ஒய்வு கொள்ளப் பனித்தார். . . . . மாலையில் துணிமணி முதலிய பரிசுகளை குடும்பத் தவர்க்குக் கொடுக்க வேண்டுமென்பது அவ்விளைஞனது திட்டம். - சிற்றம்பலம் மாடியை நாடினார். மாலை வந்தது. மயக்கத்தின் வனப்பும் வந்தது. தன் வரவு பற்றி அறிவிக்க மணிமாறன் பல்கலைக் கழகக் கட்டடத்துக்குப் போய் மீண்டான். பங்களாவில் பெரியவர்கூட இல்லை. கீழே மூத்த அண்ணி மட்டுமே இருந்தாள்.