பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மகாத்மா காந்திக்கு ஜே: 'சும்மா உட்காருங்கள்.' 'ஐயாவுக்குச் சமையல் ஆக வேணும்' 'பொழுது இருக்கிறது!" “வேலை ஆக வேண்டாமா? வேலையைப் பார்த்துக் கொண்டா பொழுது ஒடுகிறது...' கையிலிருந்த ஏடு புரின டது, 'இது நீங்கள் படிககவா?” 'பின்னே? கொஞ்சம் சூடாகவே வந்தது பதில். விவேகானந்தரின் நூல். 'ஐயா தந்தது, அவர்கள் பழக்கியது:” 'ஒ...' அந்தப் புத்தகத்தை வாங்கியபோது, அப்பாவுக்கு எல்லாம் தெரியும். ஒழுக்கம், கட்டுப்பாடு போன்ற தார்மீக வரம்புகளுடன் இரக்கம், தயை, அன்பு, பாசம், கருணை போன்ற குணநலன்களும் சீராக வளர்க்கப்பட்ட பெரியவர் அவர். பெரியவர்களுக்கு அவர்களின் தகுதி அடிமனத்தின் வாயிலாக முன்கூட்டியே தெரிந்து விடுமாம்!' என்று சிந்தித்து, பிறகு, வாங்கிய நூலைப் புரட்டினான். எடுத்த எடுப்பில், எது எது உண்மை யானதோ, எது எது பரிசுத்தமானதோ, எது எது புனித மானதோ, பெண்மை பெண் இன்த்தில் எனப் போற்றப் படுவது எதுவோ, அதற்குப் பெயர் சீதை' என்ற உண்மைகள் பிரகடனப்படுத்தப்பட்டவையாக பளிச் சிட்டன. அவ்வரிகளைப் படித்தபோது, அவன் விழிகள் கலங்கின. அவன் ராணியைப் பார்த்தான். 'உங்களைப் பற்றி கொஞ்சம் நான் அறியலாமா? என்று கேட்டான் அவன். "கொஞ்சம்தான் சொல்ல வேண்டியது உள்ளது. உங்கள் அப்பர்வை பார்க்கும்வரை அனாதையாக இருந்த