பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மகாத்மா காந்திக்கு ஜே! மிதித்துக்கொண்டு நடந்தார். பரந்து அகன்றிருந்த மார்பு மெல்லிய காற்றின் ஸ்பரிச சுகத்தில் லேசாக சுகம் காண முடிந்தது. நோக்கமில்லாத நடை. ‘சாரதாவின் நிலை பயமாக இருக்கிறது. அவள் இல்லாமல் நான் எப்படி இனி உயிரோடு இருக்க முடியும் என்னில் அவளாக இருந்த தெய்வப் பெண் அல்லவா? அவள்!. தெய்வப்பெண்...!. தெய்வாம்சம் கூடிய மனைவி! அவள் மாதிரி இனிமேல் என்னை யார் அப்படிக் கவனிச்சுக்கப் போறாங்க?...என்ன கேள்வி இது?...யாராலே அப்படி என்னை அவ்வளவு உரிமையான கவலையோட பராமரிச் சுக்க இயலும்?...இத்தனை வருஷத்துக்கு வாழ்க்கையை நான் கூத்தாக நினைச்சதில்லே! இனிமேல்தான் அப்படி ஆயிடப்போகுது!...வாழ்க்கை என்கிறது வாழ்ந்து ஆக வேண்டுமென்று மனிதனுக்கு விதித்திட்ட ஆண்டவன் கட்டளையா?... ஊஹூம், அப்படி நான் ஒதுக்கிட ஒப்ப மாட்டேன்! வாழ்க்கை என்கிறது வாழ்ந்து தீரவேண்டிய கடமை-மனிதனின் கடன்!...அவ்வளவேதான் ...ம்... எனக்கும் கடமை இருக்குது. ஆமா.திஸ் ஒன்லி.இஸ். ட்ரூ. வெய்துயிர்ப்பு வெளியேறியது. ஆனால், தன் நிழலை விரட்ட எத்தனிக்கும் பாலகனைப் போன்று ஒர் ஆற்றாமை மட்டும் மிஞ்சியது. "ஜிம்னாஸ்யம் ஒன்றின் சொந்தக்காரர் எதிர்ப் பட்டார். அடிநாளைய நட்பு. குசலம் விசாரித்துக் கொண்டனர். அம்மனிதர் தளர்ந்து ப்ோயிருந்தார். கைக் கம்பு இல்லையெனில் அவர்பாடு அந்தரம்தான்! தமிழ் நாட்டின் ஹாலிவுட் பகுதி ஆயிற்றே:பிரபலமான நடிகர் ஒருவரின் அகால மரணம் பற்றிப் பேசிக் கொண்டார்கள். அரைக்கண்ம் அதிர்த்து போனார். பெரிய ஸ்டார். ஆனார்.இப்படித்தான் வாழனும் என்கிற ஒரு அடக்கம் இல்லாமல் 'கண்டபடி: