பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 50 மகாத்மா காந்திக்கு ஜே! வாழ வேண்டுமென்கிற தத்துவத்தின் கடமைப் பண் பாட்டில் அவதாரம் செய்த மனிதப் பிறப்புக்கு, தன் போக்குப்படி சாவதற்கு அனுமதியே கிடையாது என்ற தம் சித்தாந்தத்தை-ஏட்டளவில் எழுதப்பட்ட ஒரு மூதுரையை ஒரு வடிவமாக்கிப் பேசிய தம் கருத்து மொழியை எடுத்தியம்பினார். அவளோ விழித்தாள். அவரோ அவளுக்கு நம்பிக்கை ஆனார். படுத்த படுக்கையில் கிடந்த சாரதாவுக்கு இப்போது நம்பிக்கை ஆகும் பேறு ராணிக்குக் கிடைத்தது. உயிர் ஊசலாடும் கட்டத்தில் சாரதா வேண்டினாள்: 'அம்மா ராணி, உன்னைப் பார்த்தா ஒரு வேலைக்காரியா என் ன லே மதிப்பிட முடியலை. என் பிரியமான புருஷனை உன்கிட்டே ஒப்படைச்சிட்டுத்தான் போறேன். அந்த ஒரு நிம்மதியோடதான் போறேன்!' . . சிற்றம்பலம் நிமிர்ந்து குந்தினார். கண்கள் பொடித்தன. 3 * சாரதா!... மேசையில் கிடந்த அந்தச் சாமானை எடுத்தார். பேனா வடிவு கொண்டிருந்த அதன் அடிப் பொத்தானை அழுத்தினார். அது ஒரு வாக்கிங் ஸ்டிக் ஆக உருக் காட்டிற்று. மணிமாறன் அப்பாவுக்குக் கொடுத்த பரிசு!... அவர் சிரித்துக் கொண்டார். சிரிப்பும் அழுகையும் அவர் மட்டில் பேதம் காட்டாது. அந்தப் பொருளை துக்கி வீசிவிட்டு எழுந்தார். எலுமிச்சம்பழ ரசம் கொஞ்சம் அருந்தினால் தேவலாம் போலிருந்தது. "ராணி என்று பெயர் தொண்டைக்குழியில் மிதந்தது.