பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 151 ஏனோ அழைக்கக் காணோம். கைவிரல் பூ மோதிரத்தை நெருடிவிட்டபடி, புத்தக அலமாரிக்கு நெருங்கினார். மனம் பின்னிக் கிடந்தது. எப்போதுமே அவர் மனம் இத்துணை உளைச்சல் கண்டதில்லை. நெற்றிப் பொட்டு நரம்புகள் முறுக்கேறின. ரத்த நாளங்கள் துடித்தன. எலுமிச்சைச் சாறு பிழிந்து ஒரு மிடறு குடித்தார். பிறகு தீவிரமான சிந்தனைக்குப் பின் ஒரு திட்டம் பெற்றார். ஆம்ாம், அதுவே சரி!' படிக்கட்டில் இறங்கினார் சிற்றம்பலம். அதன் அடிப் பகுதியில் ராணி நின்று, மெய்சோர்ந்த நிலைப்புடன் கண்ணிர் மாலை தொடுத்துக்கொண்டிருந்தாள், ராணி யின் விதி என!... - ராணியின் ம. ரகச் சேலையைச் சமன்செய்து போர்த் தினார். கலைந்திருந்த முடிகளைச் சீராக்கினார். கண்ணி ரைத் துடைத்துவிட்டார். அவருக்கு மீண்டும் அழுகை முட்டியது. அவள் கையில் மணிமாறனின் பரிசுத்துணி காணப்பட்டது. - "ராணி: "இதை உங்க மகன்கிட்ட நீங்களே குடுத்தி ஏன்?" 'எனக்கு இது வேண்டாம்!' "அப்படின்னா, நீ அவனை விரும்பவில்லையா?” _ விரும்புறேன்! உங்க மகனாக அவரை விரும்பு கிறேன்!' - - "ராணி - - இத்தனை அழுகையையும் இது பரியந்தம் அவள் எந்தக் கிட்டங்கியில் சேமித்து வைத்திருந்தாள்?