பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 153 விக்கல் எடுத்தது. நீர் கொடுத்தாள். குடித்தார். புதுச் சொக்காயை அணிந்து கொண்டார் அவர். புதிய ரோஜாப்பூவை நீட்டினாள் அவள். 'எனக்கு ஒரு மானசீகத் தூண்டுகோலாக இருந்தீர்கள். நீங்களும் போய்விட்டீர்கள், நேருஜி!-பூவைச் செருகிக் கொண் டார். - கீழே சிற்றம்பலத்தின் பெண்கள் வந்து இறங்கினார் கள். குரல்கள் அம்பலமாயின. மற்றவர்கள் இரவே வந்து சேர்ந்தார்கள். "ராணி, ராத்திரி நிம்மதியாகத் துங்கினாயல்லவா?' என்று கேட்டார், பெரியவர். 'ஒ'...' நளினமுடன் பதிலிறுத்தாள். அவள் மார் பகம் எம்பியது; தணிந்தது. ஆரம்பம், முடிவு என்ற இவ் விரண்டையும் ஒன்றாய் மதித்துத் திரியும் தவப் பெண் போல நிர்மலமாக இருந்தது அவளது பால் வழியும் அரவிந்த முகம். - . . அவளை இமை பாவாமல் பார்த்தார்; பார்த்தார்; அப்படிப் பார்த்தார். - அவர் இமைகள் கசிந்தன. - அவள் ஜரிகை அங்கவஸ்திரத்தை எடுத்துக் கொடுத்தாள். - எப்போதும் அவள்தான் அவரது கழுத்திலே போட்டு விடுவாள். இன்று அப்படிச் செய்யவில்லை. அவ்ரும் அதைப்பற்றிக் கேட்டுக் கொள்ளவில்லை. இளநகை வரிக்கோடிட்டது அவருடைய இதழ்க் கரையிலே. -