பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 16I டாக்டரோ சர்க்கரைத் துகளை கையில் எடுத்தார். சிற்றம்பலத்தின் வரிசைப் பற்கள் வெகு துல்லிய மாகப் ப்ளிச்சிட்டன. . பூஞ்சிட்டுகள் குறுக்கு மறித்துப் பறந்தன. தொழு கடன்பொழுது. - அவர் மனம்விட்டு, வாய்விட்டுப் பாடினார்; நினைவில் குதித்த ஏதோ ஒரு திருவாசகப் பாடல்: பாடினார்: - மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத்தமுதே யூறி நின்றென்னுளெழு பரஞ்சோதி யுள்ளவாகாண வந்தருளாய்; தேறலின்றெளிவே சிவபெருமானே. திருப்பெருந்துறையுறை சிவனே, யீறிலாப்பதங்களி யாவையுங் கடந்த இன்பமே யென் னுடையன்பே' அதே நேரத்தில் : திருமதி சிற்றம்பலம் தன்னுடைய நாட்குறிப்பில் அன்றையத் தேதியைப் புர்ட்டி இதயம் தோய்ந்த நல்லுணர்வின் நன்றிப் பெருமிதத்துடன் எழுதலானாள்: 'சமுதாயத் தீவினைகளுக்குப் பலியான பெண்களுக்குக் கைதொடுக்க அன்று ஒரு மகாத்மர் வாழ்ந்தார். இன்று ஒரு சிற்றம்பல்ம் அவர்கள் எனக்குக் கிடைத்திருக்கிறார். என் கனவைச் செயற்படுத்தி நனவாக்க, அவர் தியாக மனிதரானார். எனக்கு நிழலான அவர், இப்போது என்னையும் நிழலாக்கிப் பெருமைப் படுத்திவிட்டார்! மனிதன் கடவுளாக வாழவேண்டுமென்று எழுதிப் பேசி, உபதேசம் செய்துவிட்டு, இறுதி யில் திரைமறைவிலே கேவல்மான-அற்ப்த்தன. மான-கேடுகெட்ட மிருகமாக வாழ்ந்து போலிக் கூத்து ஆடி அடங்குகிற மாயப் பிரபஞ்சத்திலே என் சிற்றம்பலம் அவர்கள் ஒரு புரட்சி மனிதர். அவர் வாழ்வு எப்போதும் அவர் கைகளிலே