பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 மகாத்மா காந்திக்கு ஜே! தான்! மனிதன் மனிதனாக-மனிதனாகவே வாழக் கடம்ைப்பட்டிவன் என்ற சித்தாந்தத்தில் --நியதியில் புற்றுக்கொண்டு, அதன் பிடிப்பில் தம்மைத் தாமே நம்பி, அந் நம்பிக்கையையே காலத்திற்குக் கொடுத்த பதிலாக்கிவிட்டு, இப்ப்ோது அவரே ஓர் உதாரணம் ஆகி, எனக்கு உத்தாரன்னம் அளித்தார். நான் கொடுத்து வைத்தவள். அதனால் அவரை நான் எடுத்துக் கொண்டேன்! - "என் பெண்மைக்கு ஒரு பொருள் கிடைத்து விட்டது. எனக்குப்) பூரணத்துவம் கிட்டி விட்டது. அவருடன் இந்த ஒரு சில நாட்களாக நான் வாழ்ந்த - வாழ்ந்துவரும் சொர்க்க வாழ்வே என்வரை கோடானுகோடி யுகதர்மங்க ளாக் என்னுள் நிரந்தரச் சத்தியமாகி நிழலாடும்! மனிதாபிம்ானத்துக்கு ஒரு தர்மமும், நன்றிக் கடனுக்கு ஒரு கடிதமும் கிடைத்துவிட்டன, உலக்த்துக்கு அந்த உலகத்தைப் பற்றி எனககு இனி அக்கறை ஏது? ஆம்; எனக்கு வழங்கப்பட்டுள்ள காப் பும், என்னை அணைத்து என்னுள் வளர்ந்து விரும் நிழலும் எனக்குப் பொருள்ாகி பொருள் ஆன அந்த மகத்தான சக்தியும்தான் எனக்கு விதி, வினை, தெய்வம், உலகம் எல்லாம்'...... ஆமாம். இதுவே யதார்த்தமான உண்மை!' காற்று பாங்குடன் வீசிற்று. பேனாவை மூடி விட்டாள் திருமதி சிற்றம்பலம். கண்களையும் இதயத்தையும் அவளால் அப்படி மூடிவிட டியவில்லை. தவித்தாள். சூன்யத்தின் அண்டப் பெரு iளியில் ஓங்கிக் குவிந்தன. பூந்தள்ளையின் நாக்கில் ஊறத் தொடங்கின!... பாவம், விதி: விழித்துக்கொண்டிருந்தது. ஆம்; விதி விழித்துக் கொண்டுதான் இருந்தது. மாயையின் ரூபமாக அவளுது பூங்கரங்கள் இனிப்பும் ஈரமும்