பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 மகாத்மா காந்திக்கு ஜே! இத்தகைய பரம்பரை, வழிபாட்டில் நவராத்திரிக் காப்புக் கட்டும், கடைசி நாளன்று நிகழும் வெள்ளி ரத்ப் பவனியும் எடுப்புமிக்கவை. முதலும் இறுதியுமான இவ் விரு நிகழ்ச்சிகளுங்கூடக் கோயிலை அடிமை கொண்டவர் களுக்கே உரிமை பூண்டிருந்தன. ஏனைய விழாக்கள், பண்டைய மரபுப்பிரகாரம் ஆளுக்கொரு மண்டபப் படியாக உபயம் ஆகும். - பின், கூத்தன் கூத்தாடக் கேட்பானேன்? (#) ် - ထိဒီး விடிந்தால், மகாளய அமாவாசை. புண்ணியகாலம். நவராத்திரி விழா ஆரம்பமாகிவிடும். துதியை திதி, உத்தரட்டாதி நட்சத்திரம் கூடிய சித்தயோகம் சிம்ம லக்கினத்தில் அம்பலக் கூத்தனுக்குக் காப்புக் கட்டி விடு வார்கள். கொலு ஏறி விடுவான் ஆண்டவன்; மகர் நோன்பு முடிய நவராத்திரி கொண்டாட்டத்தான்! ஒதுவாருக்கு இனிமேல் நிற்க நிலைக்க நேரம் இருக்காதுதான். இரவு முழுவதும் விழாச் சம்பந்தமான அலுவல்கள் சரியாக இருக்கும். நவராத்திரி நாட்களின், அவதாரங்களுக்கான அலங்காரப் பொருள்கள், அணி மணிகள், பட்டுடைகள், வெள்ளித் தீயவரிசைகள் முதலானவற்றைக் கிட்டங்கியில் உள்ள இருப்புப் பெட்ட கத்தினின்றும் பிரித்தெடுக்க வேண்டும். கல்யாணம் காட்சிமாதிரி தெய்வ காரியங்களிலுங்கூட வேலைகள் சுற்றிச் சுற்றி வரும்; இயல்புதான். அந்திப் பொன்னொளி. சிந்துரக் கனவாகி இயற்கை யின் புதிர்மயக்கம் கொண்ட சூனியப் பெருவெளியில் சித்து விளையாடிக் கொண்டிருக்கிறது. கைப்பிடியில் சிக்கெனப் பற்றியிருந்த காகிதச் சீட்டுக் களை மேலும் ஒரு தடவை உன்னிப்பாகப் பார்வை யிட்டார். அப்பனே! நடராஜப் பெருமானே!' என்று பாசமும் பக்தியும் உருகி வழியத் தமக்குள். தமக்குத்தாமே முணுமுணுத்துக் கொண்டார். கழுத்தில் இழைந்து