பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 16? "ஆமா, அதுச்கென்ன, ஐயா?” - "அதுக்கு ஒண்னுமில்லிங்க. ஆனா, அந்தப்பிட்டுக்கு மண் மண்டப்படியை நடத்தறது யாரின்னுதான் நான் யோசிக்கிறேனுங்க!” 'பிட்டுக்கு மண் மண்டப்படியை நடத்தப் பாத்தியம் கொண்ட அம்பலவாணன் செட்டியார் இருக்கா ரல்லவா?’’ புள்ளி இருந்திருந்தால், இந்தப் பிரச்னை ஏன் இப்படிக் கிளம்பப் போகுது? நீங்க பட்டணமே கதின்னு ஆகிட்டவங்க. உங்களுக்குக் கதையே தெரியாது போவி ருக்குது, தம்பி!' - 'என்ன நடந்திச்சு அவுகளுக்கு?” “என்ன நடக்கக் கூடாதாதோ, அத்தனையும் நடத் திருச்சுது!’’ : - X- . "ஆமா தம்பி, எனக்குங்கூட மறந்து போயிட்டுது. அம்பலவாணன் செட்டியார் நம்ப மண்ணைத் துறந்து போய்ப் பத்து மாசத்துக்கு நேருங்கப் போதது!’ அட கடவுளே!' 'கடவுள் என்ன செய்வார், பாவம்' ஒதுவார் இடைமறித்தார்: 'பாவ புண்ணியத்தோட ஐந்தொகைக் கணக்கைப்பற்றி வேறும் மனுஷங்களான நமககுப் பேசுறதுக்கு அருகதை இல்லை. ஆனா இந்த ஊர்ச் செட் டிமார்களுக்குள்ளாற, அம்பலவாணன் செட்டியார் ஒரு தனிப் புள்ளியாய்த்தான் இருந்துக்கிட்டு வந்தார். என் அதுபவத்திலே என்னோட மனசறிஞ்ச உண்மையான தாக்கல் இது. அந்தக் காலத்திலே, பர்மாப் பணம் ஆட்டம் போட்ட சங்கதியும் தெரியும். இடை தடு வாந்தரத்திலே இந்த ஊரே நொடிச்சு அந்தரத்திலே நின்ன கதையும் தெரியும்; இப்போ காபித்துள், துரள் பறந்துக்கிட்டு இருக்கக்கூடிய இந்த ஊர்நடப்பும் எனக்குப் புரியும். ஆனா, அம்பலவாணன் செட்டியார் இப்படிப்பட்ட விதிக்கெல்ல்ாம் விலகி, ஒரு விலககாகவே