பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை.எஸ். ஆறுமுகம் 15 'வெத்தலை-பாக்கு, சந்தனம் வாங்கணுமுங்க, பெரிய்ப்பா!' என்று மரியாதை பளிச்சிடப் பதில் சொன் ன்ான் வேலப்பன். குடிச் சிறையிலிருந்து தன்னை விடுதலை செய்து, தன்னையும், தன் குடும்பத்தையும் காத்த புண்ணியவானுக்குக் காட்டுகின்ற நன்னி', அந்த மரியாதையில் முகம் பார்த்திருக்கலாம். "பிஸ்கோத்தும், மிட்டாயும் வாங்க வேணும்.' "பெரிய மனுசங்களுக்குக் கொடுக்கத்தானே, பெரி யப்பா?’’ "மனசாலே உயர்ந்த பெரிய மனுசங்களுக்கும் கொடுப்போம்; மனசளவிலே உயரப் பழகிக்கிட்டு வர்ற நம்மளை மாதிரி ஆளுங்களுக்கும் கொடுப்போம்!” "சவாசு! அப்படியானா, உணடனவே வாங்கிக்கிட லாம். கங்காணி ஐயாதான், சுளைசுளையாய் நூத்தி யொரு ரூபா காந்திச் சாமியோட விழாச் செலவுக்குத் தந்திருக்காரே?? 'கங்காணி ஐயா பணம் தந்தது வாஸ்தவந்தான். ஆனா, அந்தப் பணத்தை நான் தொடப் போறதில்லே!" ஏங்க, அந்தக் காசை நாம தொடப்புட்ாதுங் Górr rr?** "ஆமாப்பா; தொடத்தான் படாது!” அது பாம்புங்களா. பெரியப்பாரே?" 'ஊம்; அந்தப் பாம்பு, நல்லதா, கெட்டதான்னு குணங்குறியைத் தெரிஞ்சுக்கிறவரைக்கும், அதை நான் தொடவே மாட்டேன்! காந்தி விழாச் செலவுக்கு: வளமைப்படி நானே செலவழிச்சுக்கிடுவேன்; காத்தித் தெய்வம் தந்த பணத்தை, அந்த மகராசருக்குச் செல்