பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 68 மகாத்மா காந்திக்கு ஜே! இருந்தார். கொடிகட்டி வாழ்ந்தவர் அவர். கொடி அறுந்தால் என்ன செய்கிறது? பூர்வஜன்ம் வினைப்பயன்: அந்தப் புண்ணியவான் தம் பெண்டாட்டியை இழந்தார்; வாரிசு இல்லாத ஆளுக்குச் சொத்துப் பத்து எ துக்கு ைனு, ண்டவன் நினைச்சிட்டானோ என்னவோ? பழகின சிநேகிதருக்கோசரம் இரக்கப்பட் , பிராமண்ாள் காபிக் கிளப்பை விலை கொடுத்து வாங்கி அறந்தாங்கியிலே நடத்தினார். உண்டானபோது கோடானு கோடின்னு சொல்லுவாங்க, இல்லையா? அது மாதிரி அவரைச் சுற்றிச் சுற்றி வந்து சாப்பிட்டவங்களும், நயவஞ்சனை ய்ாலே ஏய்ச்சவங்களும் ஒரு குறைச்சலும் இல்லாமல்தான் இன்னிக்கு இருக்கிறாங்க. ஆனா, அவருக்குத்தான் நஷ்டத்துக்கு மேலே நஷ்டம் வந்திச்சு. சொத்து சுகம் வீடு வாசல் எல்லாம் போயிடுச்சு பத்து மாசத்துக்கு முந்தி அவர் இந்த மண்தூசியை உதறிப்பிட்டுப் போனவர் தான். இதுநாள் பரியந்தம் அவரைப்பற்றி ஒரு தகவலுமே இல்லை:' - . ஒதுவாருக்குத் தொண்டை அடைத்தது. கனத்தது. 'அம்பலவாணன் செட்டியாரோட பந்துக்களிலே மிேலவளவு கந்தசாமிச் செட்டியாரும் நடுத்தெரு தங்கராஜ் செட்டியாரும் ஒகோன்னு இருக்காங்களே: அவங்களுக்காச்சும் அவரைப்பத்தி ஏதானும் தெரியுமோ, என்னவோ?’ என்று விசாரணை செய்தார் பல் போன பலராமன் செட்டியார். ஒதுவார் விநயமாகச் சிரித்தார்: "பிச்சையாண்டி ஆகிட்ட அம்பலவாணன் செட்டியாரைப்பற்றி யாருக் கென்ன கவல்ை, பெரியவரே! நீங்க கண்ணாலே பார்க்க, பாயிலே படுத்தவங்க தரையிலேயும், தரையிலே படுத்த வங்க பாயிலேயும் கிடக்கலிங்களா? ஆனா, நம்ப அம்பல வாணன் செட்டியார் மானாபிமானம் மிக்கவர் ரொம்ப ரெம்ப ரோசக்கரர் ரொம்பூ ரொம்ப மாணி, பிறந்து மண்ணை மீட்டும் துறந்திட்டார். அம்பலவாணன்