பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 மகாத்மா காந்திக்கு ஜே! பிட்டு விற்ற கிழவி வந்தியின் சார்பிலே, வைகைப் பெருவளத்தை அடைக்க அல்லது அடக்கச் சோமசுந்தரக் கடவுள் மண்சு மந்து, அரிமர்த்தன பாண்டியனிடம் பிரம்படிபட்ட திருவிளையாட்டை நினைவுறுத்தியும் நினைவு கூட்டியும் விளங்கும் அந்தக் கோலத்திற்கென்று அப்படியொரு மகிமை போலும்! - - - மண்வெட்டி, பிட்டுத் தட்டு, ஐந்தடுக்கு நாமுகத் தீபம் எல்லாமே வெள்ளிப் பொருள்கள்தாம்; வெள்ளியம் பலத்தே திருநடம் புரிந்த ஐயனுக்கு உகந்தவைதாம். இவை அனைத்தும் அம்பலவாணரின் பக்திச்சுவை சொட் டும் உபயங்களேயாம். "ஊம் ஐயா, பூஜை ஆரம்பியுங்க. மணி இப்போதே பத்தடிக்கப் போகுதுங்களே, ஒதுவார் ஐயா!' உத்தரவு பிறந்தது. ஒதுவாருக்குத்திதீரென்ற ஒர் அச்சஉணர்வு அச்சாரம் கொடுதது உலுக்கி விட்டிருக்கவேண்டும். இம்ைகெர்ட் டாமல், ஆனால் தேள் கொட்டின துடிப்ப்ோடு ஆண்ட வனைப் பார்த்தார்; பார்த்துக்கொண்டே நின்றார். நெஞ்சிலும், நினைவிலும நிழலாடிய அம்பல்வர்ணன் செட்டியாரின் அன்பின் உருவம் மனக்கண்ணிலே ஆடியது கண்ட பாங்கிலே ஆடியது. ஏக்கமும் ஆர்வமும் தழலாகக் கொதிக்க, கைக்கு மெய்யான ஏமாற்றமும் ச்ோகமும் சாட்டைப் பம்பரமாகச் சுழல, அவர் சுற்றுமுற்றும் பார்வையைச் செலுத்தினார். முடியவிழ்ந்த நரைமுடிக் கற்றைகள் வாடைக் காற்றில் அசைந்தாட், அலைந்தாட நுட்பமாகக் கண்ணோட்டம் பதித்தார். அம்பலவாணன் செட்டியார் திடுதிப்பென்று இங்கே சுவாமியின் திருச் சபையின் சந்நிதியின் முன்னே வந்து குதித்துவிட மர்ட் டாரா? அம்புலிக்கு ஆசைப்படும் மழலையென அவர் மனப்பால் குடித்துவிட்டாரோ? மறு இமைப்பில், நெடு மூச்சுப் பிரிந்ததுதான் மிச்சம். மிணியைக் கையில் ஏந்தினார். - வில்வ இலைகள் சிந்தின. சிதறின. அம்பலவாணன் செட்டியாரின் ஜன்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத் திரத்தைச் சொல்லி அர்ச்சனையைத் தொட்ங்கினார். ஒதுவார். -