பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 மகாத்மா காந்திக்கு ஜே! கொண்டாடக் கொடுத்து வச்சேனே! நான் பாக்கியவான் தான்! என் மானத்தைக் கட்டிக் காத்தாயே அம்மை யப்பா! உன் விளையாட்டை என்னவென்பேன்? நீ மண், சுமந்த பாவத்துக்கு ஒர் புது அர்த்தம் கொடுக்க வேண்டித் தான் நானும் மண்சுமந்த புண்ண யத்தைப் பெற்றேனோ? நீ புதிரல்ல்வே! நான்தான் புதிர்! இல்லையானால், எனக் குன்னு மெய்யன்பரான ஒரு ஒதுவாரையும், ஒர் ஆண்டிப் பண்டாரத்தையும் கை காட்டியிருப்பாயா? கட்ைசியிலே என்னையும் மீறின வகையிலே என்னையும் இங்கே இப்போது மாயமாகக் கொண்டாந்து சேர்த்திட்டு இப்படிச் சிரிச்சுக்கிட்டு இருப்பாயா, ஆப்பனே! ஆகா! அம்மையே அப்பா ஒப்பிலா மணியே!' அந்த உருவம் உருகிக் கரைந்து கொண்டே இருக்கிறது. ઈ డి ဝါို திரு ற்று மடலும் கையுமாக வெளிப்புறப் பந்தலை அ.ை ந்தார் ஒதுவார். அவர் பார்வை நாற்புறமும் ஒடியது. மறுகணம், 'ஆ! ஐயாவா?’ என்று தம் உள் மனம் ஆனந்த பரவசம் மேலிடக் கூவியவாறு, விரைந்து பாய்ந்து, விபூதிப் பிரசாதம் வழங்கினார். ஓதுவார். எம்பிரானே! உன் விளையாட்டு இப்படியா நடந்தி ருக்குது: கண்கள் கசிந்தன: மேனி உறுப்புக்கள் ஒசித்தன. அந்த உருவம் விபூதியை மெலிந்த கை நடுங்க வாங்கிப் பூசிக்கொண்டதுதான் தாமதம் மறு இமைப்பில் அவ்வுருவம் அப்படியே தடாலென்று தரை மண்ணில் சாயந்தது. ஒதுவார் துடியாய்த் துடித்தார். கூட்டம் பரபரப்படைந்தது. 'பாவம்! யாரோ பரதேசி ஒருவர் திடீர் மயக்கம் போட்டு விழுந்திட்டார். எல்லாரும் தயவு பண்ணி ஒதுங்கி நல்ல காற்றுக்கு வழி விடுங்க ரங்கா, ஓடிப் பாய் நல்ல தண்ணிர் கொண்டாப்பா!' ஒதுவாரின் விழிகளினின்றும் கண்ணர் மாலை நீண்டு மணக்கிறது. 够 ళ 登豪 దగ్గ ၀ို ஆகா! அந்தத் துண்டாமணித் தீபம் எத்துணை அறக் கருணையோடும் ஆருட் சிரிப்பேர்டும் ஒளிஏறறு, ஒளிகாட்டிக் :ெத்ேறது: . .