பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுக்ம் 23 அவள் சுட்டிய இடங்களிலே, வீச்சரிவாளும், பட்டாக் கத்தியும் விதியென நமட்டுச் சிரிப்புச் சிரித்தன! 'எனக்கு நீதான் வேணுமாக்கும்!” ஒ. அப்படீங்களா, அம்மான் மவன்காரவுகளே?... பலே...! ஓங்களுக்கு நான்தான் வேணும்னா, மூச்சுக் காட்டாமல் என்னை எடுத்துக்கிட வேண்டியதுதானே? அப்பாலே, என்ன ரோசம் கெட்ட ரோசனை வேண்டிக் கிடக்குது? ஊம். வாங்கங்கிறேன்... ஊம்!” சிம்னி விளக்கு பெரிதாகவே எரிந்தது. மிருகவெறி கெட்டிமேளம் கொட்டப் பாய்ந்தான் சூரப்புலி வீரமுத்து. பூங்காவனம் கண்கள் சிவக்க ரத்தக்காட்டேரி ஆகிறாள் காந்தி மகாத்மா மானசீகக் குருவாகிஉபதேசம் செய்திருக்க வேண்டும் மறு இமைப்பில், பூங்காவனத்தின் நகங்களும், பற்களும், மனிதத் தன்மையைப் பறி கொடுத்து நின்ற வீரமுத்துவிடம் விளையாடுகின்றன; விளையாட்டுக் காட்டுகின்றன! ரத்தம் பிரிடுகிறது. வீரமுத்து வீரிட்டான்: "ஐயோ! வலி தாளல்லியே! எனக்கு மாப்புக்கொடுத்து என்னை விட்டுப்புடு புள்ளே! தன்னியோட நான் கண்காணாமல் ஒடிப்புடுவேன்!" சிங்காரவேலனின் புண்ணியத்திலே, வீரமுத்துவின் தலை தப்பியது. - அன்றொரு நாள் அந்திக்கட்டில் ஊருணியில் குளித்து முழுகி மஞ்சள் ரவிக்கையையும் சிவப்பு நிறத்திலான உள் பாவாடையும் காய்ப் போட்டுவிட்டுச் சுங்கடிப் புடவை யின் ஒரு தொங்கலைக் கருவேல மரத்தின் ஈசான்யமுடுக் கிலே முடிபோட்டு, மறுமுனையை உடம்பைச் சுற்றிக்