பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் படுத்திக் காட்டவேணும் என்கிற பாவப்பட்ட மிருக வெறியிலே எனக்கு எமனாகி, என் மச்சான் மேலே நயவஞ்சன்னயிலே லாரியை ஏத்தி, எந்தெய்வத்தைச் சாகடிச்ச உன்னைக் கடிச்சுக் குதறி உன்னை உசி ரோடவே சாகடிச்சுப் பழிக்குப் பழி வாங்கிட்டு, நானும் எம்மச்சான் பின்னாடி சிவலோகம் பறிஞ்சிடு றேன்!” வீரமுத்துவின் சிவப்பேறிய விழிகளிலே சுடுநீர் தளும்புகிறது; அயித்தை மகளே! ஒரு பொழுதிலே, நான் உன் தாலியைப் பறிச்சுக்கிடுறதாகச் சவால் விட்டது என்னமோ நிஜம்தான்! ஆனா, அதுக்கும் இப்ப ஏற்பட்ட விபத்துக்கும் சாமி சத்தியமாய் எந்தச் சம்பந்தமுமே கிடையாது. தவிரவும், லாரியிலே அடிபட்ட ஆள் உம்புருசன் என்கிற தாக்கலே நீ சொல்லித்தான் எனக்கு விளங்கிச்சு... என்னைப் பழிக்குப் பழி வாங்க வேண்டி, நீ என்னோட உசிரைத் தாராளமாய்க் குடிச்சுப்புடு நான் சம்மதிக்கிறேன். ஆனா, அதுக்கு ஊடாலே, நடந்த நடப்பைச் சொன்னால்தான் எம் மனசு ஆறும்...' வீரமுத்து பேச்சை முடிக்கவில்லை. கிறுக்குப் பிடித்தவளாகத் தலைமுடியைத் தாறு மாறாகவே பிய்த்துக் கொண்டவள். அடுத்த கணம் தன் கழுத்துத் தாலியையும் பிய்த்து எறிகிறாள்! "தங்கச்சியோ...' வீரமுத்துவின் ஆசைக் கண்ணாட்டி பவளக்கொடி நா தழுதழுக்க விம்முகிறாள். - வெறிச்சோடிக் கிடந்த சூன்யத்தை வெறித்தவாறு நடந்த கதையை நைந்த குரலில் பேசி நின்றாள் பூங்காவனம்.