பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மகாத்மா காந்திக்கு ஜே! 'எம் புருசன் குடிபோதையிலே லாரியை உன் மச்சான் மேலே ஏத்திக்கொன்னுப்புட்டாகளா? தங்கச்சிப் பொண்ணெ...! எம் மச்சான் எங்க கண்ணாலத்துக்கு முந்தி குடிகாரராக இருந்தது வாஸ்தவம்தான்; ஆனா, என்னைக் கட்டிக்கிட்டப்புறம், குடியை மறந்து, மெய்யாலுமே நல்ல குடிமகனாக மாறிப்பூட்டாங் களாக்கும்! தங்கத் தாலி மின்னிப்பளிச்சிடக் கருவத் தோடு பேசினாள் பவளக்கொடி. - மெய் நடுங்கப் பொறிகலங்கி மலைத்து நின்றாள் அபலை பூங்காவனம். - பவளக்கொடி செப்பினது மெய்யாலுமே சத்தியந் தானோ? அப்படின்னா, என் அருமை மச்சானோட பெருமையான உசிரைப் புறிச்சுக்கிட்டது பாழும் விதியேதானா? வீரமுத்து ஒடுங்கி நின்ற திசைநோக்கி மறுகி நடந்தாள். நெருக்கமாக வீரமுத்துவை நெருங்கி னாள் கொஞ்சம் முந்தி தான் துப்பிய எச்சில் இன்னமும் காயாமல் இருக்கவே, சுங்கடி முந்தானையைக் கொய்து எச்சிலின் ஈரத்தைத் துடைத்தாள் பூங்காவனம். - தலை நிமிர்ந்து கண்ணிர் வழிந்தோட நின்ற, வீரமுத்து, வாயைக் குவித்து ஊதினான். கள்ளச் சாராயத்தின் கெட்ட வாடை, நெடி எதுவுமே தடயம் காட்டவில்லை: அயித்தை மகளே பூங்காவனம். பவளக்கொடிக்கு நான் திருப்பூட்டினதிலேருந்து என்னைக் குடியை மறக்கச் செஞ்சு, என்னை அசலாகவே நல்லவனாகவும் மாற்றிப்புட்டா எந்தெய்வம் பவளம். சாமி சத்திய மாய்ச் சொல்லுறேன். நான் உன் தாலியைப் ப்றிச்சுக் கிடப் போறதாக ஆத்திரத்தினாலே சவால் விட்டது இமய்யான சங்கதிதான்! ஆனா, அந்தச் சுபதத்துக்கும் நடந்த விபத்துக்கும் ஒரு சம்பந்தமும் ஆவணத்தாங்கோட்டை- பன்ங்குளம்