பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மகாத்மா காந்திக்கு ஜே! வதைப் போலவே, அவளைப் பார்க்கும் கண்கள் அன்புப் போதையும் இன்பப் போதமும் பெற்றுத் திகழும். பொன்னுக்கு அரசியாகவும், பெண்ணுக்கு அரசியாகவும் விளங்கின மகளுக்கு நடை வண்டி கொடுத்தவர்கள் அவளை ஈன்று வளர்த்து வந்தவர்களே தாம். என்றாலும் ஓர் அதிசயம் என்னவென்றால், காலம் பருவத்தையும், பரு வம் தாவணியையும் பரிசளித்தன. அவள் சமைந்தாள்'. திறந்த வெளி அரங்கமாக இயங்கிவந்த ஊரும் உலகமும் அன்று தொட்டு அவள் வரை சுருங்கிக் கொள்ள்ப் பழகிக் கொண்டன. அவள் மனம் புழுங்கினாள். விரக்தியின் தெட்டுயிர்ப்பும், வேதனையின் குமைச்சலும் அவளது பருவத் துடிப்பைக் கிண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தருணத்தில், ஆசை முகமொன்றை ஆர்வம் பொங்க மனத்திரையில் வரைந்து ஓவியமாக்கி அனுபவித்து ஆறுதல் பெற்றாள் அவள். மச்சான் இந்தக் கணக்குக்கு பர்மாவிலே மாந்தளையிலேருந்து திரும்பினதும், எங் கழுத்திலே மஞ்கக்கயிறு கட்டிடுவாங்களாமே!’ என்று தனக்குத்தானே வினா வடிவில் விடை அமைத்துப் பூரித்துப் போயிற்று பெண் உள்ளம், கனவின் வடிவிலே காதல் வளர்ந்தது. காதலின் உருக்கொண்டு கனவு நீண்டது. காதலும் கனவும் ஒட்டாத இரு துருவங்கள் என்கிறார்களே? ஐயை அறிவாளோ? இரண்டு முன்னைப் பழங்கதை ஆயிற்றே இத்தனையும்: பொன்னரசி விம்மினாள். ஏன்? வாழ்க்கைப்பாதை யில் இருபத்தெட்டு மைல் கற்களைக் கடந்து வந்தவ இருக்குத் துன்பம் ஒரு கேடா என்ன? செவிப் புலன், எங்கிருந்தோ ய அழுகைக் குரலை நுகர்ந்தது.